தமிழகத்தில் கொரோனாவை எதிர்த்து போராடும்  எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பாகுபாடு இன்றி கொரோனா தொற்று தாக்கி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே திமுகவை சேர்ந்த அன்பழகன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி உள்ளிட்டோர் கொரோனா பாதித்து உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்: அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ புற்றுநோயால் மரணம்...! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!
 

அந்தவகையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்  கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை தொடர்ந்து இவருடைய மனைவி, தமிழ் செல்விக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இருவரும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தமிழ் செல்வியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை காண முடிந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே, எச்.வசந்த குமார் கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்: நயன்தாராவை பார்த்து பொறாமையில் பொசுங்கும் சமந்தா? கோடிகளை ஏற்றி தயாரிப்பாளரை கிறுகிறுக்க வைக்கிறாராம்!
 

இந்நிலையில், இவருடைய உடல்... மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் இறந்தவர் உடலை எப்படி, மக்கள் அஞ்சலிக்காக வைப்பது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து, வசந்தகுமார் அவர்களின் மகனும், நடிகருமான விஜய் வசந்த், தன்னுடைய தந்தைக்கு கொரோனா தொற்று இருந்தது உண்மை தான், ஆனால் அவருக்கு கொரோனா பூரணமாக குணமடைந்து விட்டது.

நுரையீரல் தொற்று, சர்க்கரை வியாதி போன்ற செகெண்டரி, பிரச்சனைகள் காரணமாக தான் அவர் உயிரிழந்ததாக, மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.