பிரபல நடிகை வனிதா விஜய்குமாருக்கும் விஷ்வல் எடிட்டர் பீட்டர் பாலுக்கும் கடந்த 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும், தனது இரண்டு மகள்கள் முன்னிலையில் பீட்டரை வனிதா கரம் பிடித்தார். கடந்த 7 ஆண்டுகளாக பீட்டர் பாலை பிரிந்து வாழ்ந்து வரும் அவருடைய முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போர்க்கெடி தூக்கியுள்ளார். முறையாக விவகாரத்து பெறாமல் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதா தன் கணவரை அபகரித்து கொண்டதாக ஆன்லைன் மீடியாக்களில் பேட்டி கொடுத்து வருகிறார். 

சில நாட்களுக்கு முன்பு கூட பேட்டி ஒன்றில் பேசிய ஹெலன், என் கணவரை வீட்டிற்குள்ளேயே வைத்து வனிதா காரியம் சாதித்து கொண்டார். எனக்கு விவாகரத்து கொடுப்பதில் விருப்பம் இல்லை. பீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண்கள் விவகாரத்திலும் அடிக்கடி சிக்கிக் கொள்ளவார். என்ன இருந்தாலும் கணவர் என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன்.  எனக்கு எனது கணவருடன் சேர்ந்து வாழவே விருப்பம் என தெரிவித்துள்ளார். மேலும் பீட்டர் பாலுக்கு தற்போது வருமானம் ஏதுமில்லாததால், வனிதா போன்ற நடிகையுடன் செட்டில் ஆகிவிட்டால் அவர் சொல்லும் வேலையை செய்து கொண்டு காலம் தள்ள பிளான் போட்டுள்ளார். என சகட்டுமேனிக்கு கிழித்தெடுத்துள்ளார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது யூ-டியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்ட வனிதா, பீட்டர் பால் மிகவும் நல்லவர் என்றும். அவர் குடிக்கவே மாட்டார், பொம்பள பொறுக்கி என அபாண்டமாக ஹெலன் குற்றச்சாட்டுகிறார் எனக்கூறினார். அத்தோடு நிற்காமல் பீட்டர் பால் குடிகாரர் இல்லை என்பதற்கு ஆதாரமாக தனது யூ-டியூப் சேனலில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். போதாக்குறைக்கு வீட்டிற்குள் கணவன், மனைவி அடிக்கும் முத்த லூட்டிகளை வேறு போட்டோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...!

அப்படித்தான் நடிகை குட்டி,  பத்மினியும் வனிதா அவர்களுடைய பிள்ளைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடலாம் என அறிவுறை கூறியிருந்தார். இதனால் செம்ம கடுப்பான வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் குட்டி பத்மினிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அன்புள்ள குட்டி பத்மினி உங்களைப் பற்றி இந்த இடத்தில் பேசுவதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் என்னிடம் பேசாமல் இங்கு தான் பேசினீர்கள். நீங்கள் என்னை ஒரு நேர்காணலுக்கு அழைத்திருக்கலாம், நான் ஒப்புக் கொண்டு இருப்பேன்.. உங்கள் மீது எனக்கு அதிக மரியாதை உள்ளது. ஆனால் தற்போது உங்கள் நோக்கம் என்ன என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களிடம் ஒன்றே ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். என் குழந்தைகளை பற்றி நீங்கள் கொடுத்த மோசமான பரிந்துரைக்கு நன்றி. நான் உங்களை போன்று இல்லை.” என்று பதிலடி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க:  பாவாடை, தாவணியில் சும்மா நச்சுன்னு இருக்கும் லாஸ்லியா... வைரலாகும் இலங்கை பெண்ணின் மனதை மயக்கும் அழகு...!

இதற்கு பதிலளித்துள்ள குட்டி பத்மினி, ஹாய் வனிதா உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோரும் அளவிற்கு நான் முதிர்ச்சி அடைந்துள்ளேன். நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.