இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த வாரம் தான், உதயநிதி மற்றும் தமன்னா நடித்திருந்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி ஒரு வாரம் மட்டுமே ஆன நினைத்தால் அடுத்த படம் குறித்து அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த 'மாமனிதன்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சீனுராமசாமி ஓய்வு இன்றி, அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார்.  இந்த படத்தை 'டயம்லைன் சினிமாஸ்' நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிப்பார்க்கப்படுகிறது.