தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது கடவுள் குளிப்பதை காட்டுகிறார்கள், ஆனால் டிரஸ் பண்ணும் போது மட்டும் திரை போட்டு மூடி விடுவார்கள் என சர்ச்சையாக பேசியதாக ஒரு தகவல் தீயாய் பரவியது.

ஜோதிகாவின், கோவில் பிரச்னையை அடுத்து விஜய் சேதுபதியின் கடவுள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க, ஆளுக்கு ஒரு பக்கம் விமர்சனம் செய்ய துவங்கினர். 

 மேலும் இந்த விவகாரம் குறித்து விஜய்சேதுபதி மீது அகில இந்திய இந்துமகா என்ற அமைப்பு காவல் துறையில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. எச்சரிக்கும் விதமாகவும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

மேலும் செய்திகள்: மகள் வயது பெண்ணின் முன்னழகை மோசமாக வர்ணித்த இயக்குனர்..! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
 

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் ஆரம்ப கால திரைப்பயணம் முதல், தற்போது வரை அவரது வளர்ச்சிக்கு ஊன்று கோல் போல் இருக்கும், இயக்குனர் சீனு ராமசாமி, மறைந்த நாடக நடிகரும், வெள்ளித்திரை நடிகருமான கிரேஸி மோகம், பட்டிமன்றம் ஒன்றில் பேசியதை வெளியிட்டு, இதை தான் விஜய் சேதுபதியும் பேசி இருக்கிறார். அவரை யாரும் திட்டவில்லை, இவரை மட்டும் கடப்பாடு விமர்சித்துள்ளேர்கள் என இருவருடைய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்விட்டில், குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, அப்படி ஒரு குழந்தை கேட்டதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள்,. இது புரியாமல் மிகவும் மோசமான வசைகளை வீசியோர் தெய்வத்தின் சாட்சியாக திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். விரைவில் மாமனிதன் திரைப்படம் வெளியாகும், அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: 1 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொள்ள நான் ரெடி! நீங்க இதுக்கு ரெடியா? தயாரிப்பாளர்களுக்கு ட்விஸ்ட் வைத்த ஆர்த்தி!
 

விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் வெளியாக உள்ள மாமனிதன் படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.