சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும், தன்னுடைய காமெடி பேச்சாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. 

மேலும் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவராக இருந்தாலும், இவர் காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாகவும், ஓவியாவுக்கு எதிராகவும் பேசியதால், மக்களின் கோபத்திற்கு ஆளாகி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், வழக்கம் போல், தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வந்தார். 

மேலும் செய்திகள்: அவசர தேவையில் கர்ப்பிணிகள்..! உயிர் காக்கும் பணியில் இறங்கி... அதிரடி காட்டிய ரஜினி மக்கள் மன்றத்தினர்!
 

இந்நிலையில் தற்போது இவர், பேசி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அனைவருடைய கவனத்தையும் பெற்றுள்ளது. இதில், தற்போது கொரோனா பிரச்சனையால் போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக திரைப்பட பணிகள் அனைத்தும் முடங்கியதால், கடன் உடன் பட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதற்கு, நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தொடர்ந்து தங்களுடைய சம்பளத்தை குறைத்து கொள்வதாக தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தனக்கும் ஒரு வருடத்திற்கு இனி ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே போதும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். 

மேலும், இந்த லாக்டவுன் நேரத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்களாகிய நாங்கள் நன்றாக இருக்க முடியும். எனவே அவர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் என்னால் முடிந்த அளவு நான் உதவி செய்ய முடிவு செய்துள்ளேன். 

மேலும் செய்திகள்: மகள் வயது பெண்ணின் முன்னழகை மோசமாக வர்ணித்த இயக்குனர்..! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
 

இனிமேல் ஒரு வருடத்திற்கு நான் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற பெற்று கொள்கிறேன், அதே நேரத்தில்... எனக்கு சம்பளமாக கொடுக்கும் தொகையை கூடுதலாக ஒரு பத்து கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு சம்பளமாக கொடுக்க வேண்டும் என்பதே எனது ஒரு தாழ்மையான விண்ணப்பம் என்றும் ஆர்த்தி கூறியுள்ளார். 

ஒரு ரூபாய் சம்பளம் பெற்று கொள்கிறேன் என சொல்லி இப்படி ஒரு ட்விஸ்ட்டையும் தயாரிப்பாளர்களுக்கு வைத்துள்ளார். இனினும் இவரின் நல்ல எண்ணம், 10 பேருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பது தான்.

மேலும் செய்திகள்:குட்டி பாப்பா முதல்... கியூட் நாயகி வரை! சாய்பல்லவி குடும்பத்துடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படங்கள்!
 

இதை தொடர்ந்து இந்த வீடியோவில், தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டு, தயாரிப்பாளர்களின் சுமையை குறைத்த பிரபலங்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஆர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.