தமிழ்சினிமாவை ஒலக அளவில் தூக்கிப் பிடிக்க பொறந்த கலைத்தாயின் தலை மகன் அவரு. மத்த ஹீரோவெல்லாம் கேமெரா முன்னாடிதான் நடிப்பாங்க, ஆனா தலைவன் வூட்டுல தூங்குறது கூட ஆஸ்கார் லெவல் நடிப்புமாதிரி அம்பூஊஊஊஊட்டு அழகா இருக்கும். 

அவருக்கு அழகு பெருசு, ஆஸ்தி பெருசு, புகழ் பெருசு மட்டுமில்ல எல்லாமே பெருசுதான். அட மச்சத்தை சொன்னோமுங்க. ஹாலிவு மட்டுமில்ல மோலி, டோலி, பாலிவுட்டு ஹீரோயினுங்க கூட அண்ணாத்த கூட ஆட்டம் போட தவியா தவிப்பாய்ங்க. (ஒரு வேளை சினிமா வாய்ப்பு கிடைக்காட்டியும், ’தனியா’ வாய்ப்பு கிடைச்சாலும் டபுள் ஓ.கே. சொல்லிடுவாங்க.)

தலைவனோட தனிப்பட்ட வாழ்க்கையை கொஞ்சம் உத்துப் பாத்தீங்கன்னா தாறுமாறா தலைசுத்திப்போடும் ஒங்களுக்கு. அந்தளவுக்கு கெட்ட கவர்ச்சியான பேர்வழி. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றோம் கேளுங்க...தன் வூட்டுக்குள்ளே நுழைஞ்சதும் அண்ணன் பண்ணுகிற முக்கிய வேலை டிரெஸ்ஸை கழட்டுறதுதான். ஆமாங்க, முதல்ல ஷூ ஒரு பக்கம் பறக்கும், அடுத்து சட்டை மறுபக்கம் பறக்கும், கடைசியா பேண்ட் இன்னொரு பக்கம் பறக்கும். வெறும் ஜட்டியோடுதான் வீட்டினுள் வளைய வருவார். வளர்ந்த பிள்ளைங்க வூட்ல இருக்கிறாங்கோ அப்படிங்கிற எண்ணமெல்லாம் கிடையாதாம். கேட்டால் ‘என் ஆடை! என் உரிமை!’ என்பார். 

அண்ணனின் அழகு பள்ளத்தாக்கில் விழுந்து எழுந்த மங்கைகள் எண்ணிலடங்காதது. ஆனால் இவர் எக்குத்தப்பாக சிக்கி சீரழிஞ்சது இடுப்பு நடிகையிடம்தான். இவருக்கும், அந்த நடிகைக்கும் சித்தப்பா - அண்ணன் மகள் வயது வித்தியாசமிருக்கும். ஆனால் காதலுக்கு கண்ணு,மண்ணு மட்டுமில்லை வயசும் தெரியாதில்லையா! 

இவரு அந்த பொண்ணு பின்னாடி ஹட்ச் பப்பி போல் வாலாட்டி வர, அதுவோ ஓவராய் சிலுப்பிக் கொண்டு சீன் போடும். எத்தனையோ நள்ளிரவில், நடு ரோட்டில் காரில் சண்டை போட்டுவிட்டு அவரை கீழே இறங்க வைத்து சில கிலோமீட்டர்கள் நடக்க வைத்திருக்கிறது. இதில் ஹைலைட்டே...அந்த கார் அவருடையது! என்பதுதான். கோபத்தில் அந்தப் பொண்ணு காரில் பறந்துவிட இவரோ, டிரைவருக்கு போன் போட்டு ‘அவளை பத்திரமா கொண்டு போய் இறக்கிடுய்யா’ என்று ஆர்டர் போட்டுவிட்டு ஆட்டோவை தேடுவார். முகத்தில் கர்சீப் கட்டியபடி ஆட்டோவை பிடித்து பேட்டை வந்து சேர்வார் இந்த அழகு ஆழ்வார். மறுநாள் காலையில் விடியும் முன் அந்த பொண்ணோட வூட்டில் போய் நின்று தாஜா செய்வார்! 

இப்படி போய்க் கொண்டிருந்தது இவர்களின் காதலும், மோதலும். இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து ஒரு படமெடுத்தார் சீனியர் கமர்ஷியல் இயக்குநர் ஒருவர். ஃபாரீனில் சாங் ஷூட். போய் இறங்கி ஆளாளுக்கு ஹோட்டலில் ஐக்கியமாகிவிட்டார்கள். டைரக்டர் ஒரு பர்முடாஸை மாட்டிக் கொண்டு ஜாலி வாக் போலாமென்று தன் ரூம் கதவை திறந்து வெளியில் வந்தார். பேரதிர்ச்சி அவருக்கு. ஹீரோ, தன் அறைவாசலில் அலங்கோல ஆடையில் நின்றபடி கதவை தட்டி கெஞ்சிக் கொண்டிருக்கிறார். இவருக்கு நிலைமை புரிந்துவிட்டது சட்டென்று உள்ளே போக முயன்றவரை இழுத்த நாயகன் ‘கொஞ்சம் அவளை சமாதானப்படுத்துங்க.’ என்று தூது அனுப்பினார். 

நாயகனின் அறையை ’மேடம்’ என்று இவர் தட்ட, மெதுவாக திறந்தது. நாயகி நின்ற கோலத்தை டைரக்டரால் சகிக்க முடியவில்லை. ஆனாலும் ஐம்புலனை அடக்கிக் கொண்டு பஞ்சாயத்து பேச துவங்கினார். அந்தப் பொண்ணு ஓவ் ஹோவ் என குதித்து கூச்சலிட்டு ஹீரோவை திட்டியது. ஒருவாறு சமாதானம் செய்து வைத்து ‘என்னோட ரூம்ல தான் அவரு இருக்கார். போய் பேசுங்க ப்ளீஸ்!’ என்று சொல்லிவிட்டு கீழிறங்கினார். அவருக்கு இருந்த மூடுக்கு வாக் போக முடியவில்லை, நேராக பாருக்கு போயி நாலு ரவுண்ட்ஸை நச்ச்சென்று ஏற்றிக் கொண்டார். 

’ஹும் மனுஷன் வாழுறாரு. இந்த குளிர்ல அவரோட கூட்டணி செமத்தியா ஜெகஜோதி காட்டும். நாம  சுயேட்சையா நின்னுட்டு தூங்கிட வேண்டிதான்.’ என்று ஹீரோவை நினைத்து பொறாமைப்பட்ட படியும், தன் சிங்கிள் நிலையை நினைத்து நொந்தபடியும் தன் ரூம் பக்கம் வந்தார். உள்ளே கிச்சுக்கிச்சு சப்தம். மெதுவாக கதவை திறந்து பார்த்தால்.....ஷேம் ஷேப் பப்பி ஷேம்! ஊருக்கெல்லாம் தீர்ப்பு சொன்ன அந்த நாட்டாம டைரக்டருக்கே பேயடிக்க வெச்சுட்டாங்களேடா!