இயக்குனர் சசி இயக்கத்தில், விஜய் ஆன்டனி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பிச்சைக்காரன், இந்த படம் தெலுங்கிலும் மிக பெரிய வெற்றிபெற்றது.
இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை சட்னா டைட்டஸ், பிச்சைக்காரன் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்தது.இவரும் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில் திடீர் என பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கே .ஆர்.பிலிம்ஸ் பங்குதாரர்கலில் ஒருவரான கார்த்தி என்பவரை சட்னா ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக சட்னாவின் தாயார் மாயாவும் தன் மகளை ஏமாற்றி, ஆசை வார்த்தைகள் கூறி கார்த்தி ஏமாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகார் கொடுத்தார்.
இது பற்றி போலீசார் விசாரித்த போது, கார்த்திகை மனப்பூர்வமாக காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாகவும், விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
தற்போது இவர்கள் திருமணத்திற்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்துள்ளதால், இவர்களது திருமணம் பிப்ரவரி 6 தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.
இதில் நெருங்கிய சொந்தக்காரர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது, அதனை தொடர்ந்து பிப்ரவரி 10 தேதி சென்னையில் வடபழனியில் அமைந்துள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் திருமண வரவேற்பு நடக்கிறது . இதில் திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது.
