நயன்தாரா 75 படத்தில்...பிக்பாஸ் பிரபலம் உள்ளிட்ட 3 பேர்! யார் யார் தெரியுமா?

 நடிகை நயன்தாராவின் 75 ஆவது படம் குறித்த அறிவிப்பு அவ்வபோது வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் 3 நடிகர்கள் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

Sathyaraj and suresh chakravarth join in nayanthara 75 movie

நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து கடைசியாக வெளியான ஓ2 மற்றும் கனெக்ட் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே... மேலும், கமிட் ஆகி இருந்த சில படங்களிலும் ஒரு சில காரணங்களால் நயன்தாரா நடிக்க முடியாமல் போனதாக சில தகவல்கள் வெளியாகின. வாங்கிய அட்வான்ஸ் தொகையை கூட தயாரிப்பாளரை அழைத்து, திருப்பி கொடுத்ததாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது நயன்தாரா பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக 'ஜவான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்... தற்போது நயன்தாராவின் 75 ஆவது படம் குறித்த தகவல் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில்,  ஏற்கனவே நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக 'ராஜா ராணி' படத்திற்கு பின்னர் ஜெய் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

குறையாத கலெக்ஷன்..! 8 நாட்களில் பத்து தல-யை பந்தாடிய 'விடுதலை'..! வசூல் விவரம் இதோ..

Sathyaraj and suresh chakravarth join in nayanthara 75 movie

மேலும் இந்த படத்தை, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான நீல் கிருஷ்ணா இயக்க, ட்ரைடென்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் நடந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. நேற்றைய தினம் கூட, இந்த படத்திற்கு  இசையமைப்பாளர் தமன்  இசையமைக்க உள்ளதாக, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு.. படக்குழு அறிவித்தது.

 

 

 இதைத்தொடர்ந்து நயன்தாராவுடன் சென்டிமென்ட் ஆன நடிகர் ஒருவரும் இப்படத்தில் இணைந்துள்ள தகவல் அதிகார பூர்வமாக வெளியானது. அவர் வேறு யாரும் அல்ல 'ராஜா ராணி' மற்றும் 'கனெக்ட்' ஆகிய படங்களில் நயன்தாராவுக்கு, தந்தையாக நடித்த சத்யராஜ் இப்படத்தில் இணைந்துள்ளார். இவரை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலமான சுரேஷ் சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர். மேலும் அடுத்தடுத்து இந்த படத்தில் நடிக்க உள்ள பிரபலங்கள் குறிக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சும்மா பிண்ணிடீங்க வெற்றி..! 'விடுதலை' படம் பார்த்து பிரமித்து போய் பாராட்டிய சூப்பர் ஸ்டார்..!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios