sathiyaraj daugther divya talk about his father
சத்யராஜின் இத்தனையாண்டு சினிமா பயணத்தில் அவர் முதலில் சந்தித்த பிரச்சனை என்றால் அது 'பாகுபலி 2' பிரச்சனை தான்.
இந்த பிரச்சனை சுமூகமாக முடிய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சத்யராஜ் கன்னட மக்களிடம் தான் ஒன்பது வருடங்களுக்கு முன் பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் .
இந்த நிலையில் இதுகுறித்து சத்யராஜ் மகள் திவ்யா கூறியபோதும், 'எனது தந்தை எப்போதும் தன்னலமற்றவராகவும், நேர்மையுடைவராகவும், அச்சமற்ற மனிதராகவும் இருக்கின்றார். அவர் தமிழ் மக்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி குரல் கொடுத்து வருபவர். நான் அவரை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் சத்யராஜின் மகள் திவ்யா ஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழ் அகதிகளுக்கு 3 நாள் விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளார். இந்த முகாமில் தமிழ் அகதிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் இரத்த சோகைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவு மற்றும் வைட்டமின் சிகிச்சையின் முக்கியத்துவம் ஆகியவற்றை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை தமிழ் அகதிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தார். அகதிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நல்ல பயன் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே திவ்யா, ' 'A Bit To Be Fit' என்ற டைட்டிலில் உருவான ஆவணப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த ஆவணப்படம் பற்றி அவரு கூறுகையில் விளையாட்டு மற்றும் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடித்ததன் மூலம் தன் தந்தைக்கு பெருமை சேர்த்ததாக கருதுவதாக கூறியுள்ளார்.
