சென்னையில் உள்ள புகழ் பெற்ற திரையரங்குகளில் ஒன்று சத்தியம் சினிமாஸ். இன்று வரை, முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கும் படங்களில் இசைவெளியீட்டு விழாக்கள் இங்கு தான் நடக்கிறது. மேலும் இது சென்னையின் ஒரு அடையாளம் என்றும் கூறலாம்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் உள்ள சத்யம் சினிமாஸ் திரையரங்குகளின் 71.7% பங்குகளை ரூ.633 கோடிக்கும், பி.வி.ஆர் நிறுவனத்தின் சில பங்குகளில் கொடுத்த வகையில் மொத்தம் ரூ.850, கோடிக்கும் சத்யம் சினிமாஸ் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம், தெலுங்கனா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் சத்தியம் சினிமாஸ்க்கு மொத்தம் 76 திரையரங்குகள் உள்ளன. 

தற்போது பிவிஆர் நிறுவனத்திற்கு சத்தியம் சினிமாஸ் கைமாறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சென்னையில் பிவிஆர் நிறுவனத்தின் திரையரங்குகள் ஸ்கைவாக், கிராண்ட் மால், கிராண்டு கலாடா ஆகிய இடங்களில் செயல்பட்டு வருவது. மேலும் 1974ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியம் சினிமாஸ்க்கு தற்போது 31 திரையரங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.