கிராமத்து கதைகளை தேர்வு செய்து வெற்றி படங்களை கொடுத்துவருபவர் இயக்குனர் முத்தையா, கடைசியாக விஷாலை வைத்து மருது படத்தை இயக்கிய இவர் தற்போது  சசி குமாரை வைத்து  'கொடிவீரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக  முதல்முறையாக ஹன்சிகா நடிக்கவுள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது சிவகங்கை  அருகில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்து வருகிறது.
 
இந்த படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.  

சசிகுமார் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு சென்டிமென்ட்  இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த படம் தங்கச்சி சென்டிமென்டை முன்வைத்து எடுக்கப்படுகிறது.

தங்கச்சி கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளதுபோல் திரைக்கதை அமைந்துள்ளதால் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என கூறப்படுகிறது.