MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!

Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும், மீனாவும் சேர்ந்து பிளான் போட்டு, விஜயாவை அண்ணாமலையுடன் பேச வைத்து உள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : May 11 2026, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா, சுருதி வீட்டிலும், அண்ணாமலை மீனா வீட்டிலும் வசித்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் எப்படியாவது பேச வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் முத்து - மீனா, பல்வேறு திட்டங்களை தீட்டுகிறார்கள். விஜயாவை அழைத்து வரலாம் என முத்து ஐடியா கொடுக்க, உங்க அம்மா இங்க வரமாட்டாங்க என கூறுகிறார் மீனா. அதேபோல் அண்ணாமலையை போய் பார்க்க சொன்னால் அவரும் முடியாது என சொல்லிவிடுவார். அவர் என்ன முடிவெடுத்தார்கள் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விஜயாவிடம் பேசிய அண்ணாமலை
Image Credit : jiohotstar

விஜயாவிடம் பேசிய அண்ணாமலை

இதையடுத்து முத்து, அண்ணாமலை குளிக்கும் நேரத்தில் வீட்டில் உள்ள அவருடைய போனை எடுத்து, விஜயாவுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கிறார். அதைப்பார்த்த விஜயா, உடனே அண்ணாமலைக்கு போன் போடுகிறார். அதன்பின் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். எப்படி இருக்க என அண்ணாமலை கேட்க, விஜயா தான் நன்றாக இருப்பதாக பொய் சொல்கிறார். அதன்பின் எதற்காக மிஸ்டு கால் கொடுத்தீர்கள் என விஜயா கேட்க, என்னது நான் போன் பண்ணிருந்தனா என அண்ணாமலை செக் பண்ணி பார்க்க, அப்போது முத்துவும் மீனாவும் அங்கு நிற்பதை பார்க்கிறார். இவங்களோட வேலை தானா என அண்ணாமலை கண்டுபிடித்துவிடுகிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : 1000 எபிசோடுகளை எட்டி சிறகடிக்க ஆசை சாதனை... இதற்கு முன் இந்த மைல்கல்லை எட்டிய விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன?
Related image2
Siragadikka Aasai : ரேகாவுக்கு டேக்கா கொடுக்கும் சிந்தாமணி... கடும் அப்செட்டில் விஜயா
34
ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்புக்கு செல்லும் முத்து - மீனா
Image Credit : jiohotstar

ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்புக்கு செல்லும் முத்து - மீனா

மறுபுறம் முத்துவும் மீனாவும் ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்புக்கு செல்கிறார்கள். அங்கு யாருமே இருக்க மாட்டார்கள் என பதற்றத்துடனே முத்துவும் மீனாவும் செல்ல, உள்ளே போய் பார்த்தால் நிறைய பேர் இருக்கிறார்கள். இதனால் சற்று ஆறுதல் அடைகிறார் முத்து. அப்போது அந்த வகுப்புக்கு எண்ட்ரி கொடுக்கிறார் ஸ்வேதா. அங்கு வந்த பின்னர் முத்து, மீனாவிடம் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னேன்ல அது வேறெதுவுமில்லை, உங்களுக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்பு எடுக்கப் போறது நான் தான் என கூறுகிறார். இதைக்கேட்டு முத்து செம சந்தோஷம் அடைகிறார்.

44
முத்துவுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்
Image Credit : jiohotstar

முத்துவுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்

அதன்பின்னர் அங்கு வந்திருந்தவர்களிடம் ஒவ்வொருவராக எழுந்து உங்களை பற்றி இண்ட்ரோ கொடுக்க வேண்டும், அதுவும் இங்கிலிஷில் தான் சொல்ல வேண்டும் என கூறுகிறார் ஸ்வேதா. அப்போது அங்கு ஒருவர் எண்ட்ரி கொடுக்கிறார். அவர் வேற யாருமில்லை, முத்துவின் நண்பர் முருகன் தான். பொண்டாட்டி தொல்லை தாங்க முடியாமல் தான் இங்கு வந்ததாக கூறுகிறார் முருகன். ஆபிஸ்ல புரமோஷன் கிடைத்துள்ளதால் அடிக்கடி வெளியூர் போக வேண்டியது வரும் அதனால் இங்கிலிஷ் கத்துக்க சொல்லி அனுப்பிட்டா என் பொண்டாட்டி என கூறுகிறார் முருகன். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Wild Card entry: பிக்பாஸ் வீட்டில் புதிய புயல்..ஆனந்தியின் அதிரடி என்ட்ரி
Recommended image2
Bigg Boss 10 : எஸ்கேப் ஆன முனியம்மா... எலிமினேட் ஆனது யார்? பிக் பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு எவிக்‌ஷனா..!
Recommended image3
Zee Tamil : விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புத்தம் புது படங்கள்; ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னென்ன?
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : 1000 எபிசோடுகளை எட்டி சிறகடிக்க ஆசை சாதனை... இதற்கு முன் இந்த மைல்கல்லை எட்டிய விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன?
Recommended image2
Siragadikka Aasai : ரேகாவுக்கு டேக்கா கொடுக்கும் சிந்தாமணி... கடும் அப்செட்டில் விஜயா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved