மனதில் பட்டத்தை வெளிப்படையாக கூறும் நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன், இதை பல விஷயங்களிலும் நிரூபித்துள்ளர். அப்படிதான் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் விஷயத்திலும் தனது கருத்தை தொடர்ந்து ட்விட்டர் மூலம் கூறி வருகிறார்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அரசியல் சூழலில் இவர் ஒரு முன்னணி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ‘சசிகலாவை சின்னம்மா என்று அழைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்’ என கேட்டனர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அவர் ’அங்கு இருப்பவர்கள் எல்லாம் ஒரு கம்பெனியின் தலமை அதிகாரி போல் தான். அவர்களால் ஒழுங்காக வழிநடத்த முடியவில்லை என்றால், அங்கிருந்து சென்றுவிட வேண்டும்’ . என சமாளிப்பது போல் கூறியுள்ளார்.

ஆனால் அந்த கேள்வியை அவர் கடைசிவரை தட்டி கழிக்கவே முற்பட்டார் , மேலும் அந்த கேள்வியை விடாமல் கேட்ட தொகுப்பாளருக்கு கமலின் கோபம் தான் பதிலாக கிடைத்துள்ளது. (