இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஆர்யாவின் 30வது படமாக உருவாகியுள்ள 'சார்பட்டா' படத்திற்காக மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து, நடித்துள்ளார் ஆர்யா. இவர் மட்டும் இன்றி, இவருடன் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பல்வேறு கடுமையான உடல் பயிற்சிகள் மற்றும் பாக்ஸிங் கற்று கொண்டுதான் நடித்துள்ளனர். இந்த படத்தை 'மெட்ராஸ்', 'காலா', 'கபாலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். கே 9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆர்யா, இப்படத்தில்... வடசென்னை வாலிபராகவும், பாக்ஸராகவும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்து, விரைவில் டிரைலர் வெளியாக போகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக, 'சார்பட்டா' படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஒவ்வொருவருடைய கதாப்பாத்திரம் குறித்தும், படக்குழு விளக்கியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும், எவ்வளவு கடுமையாக படத்திற்காக உழைத்துள்ளனர் என்பதும் தெரிகிறது.

ஏற்கனவே பொங்கல் விருந்தாக பொங்கல் விருந்தாக வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய போஸ்டரில் சார்பட்டா பரம்பரையை சார்ந்த ரேவ் கண்டெடுத்த வைரமாக கபிலன் (ஆர்யா) அவரை எதிர்த்து இடியாப்ப பரம்பரையை சார்ந்த பாயும் புலி வேம்புலி (ஜான் கொக்கேன்) மோதுவது போல் போஸ்டர் அமைந்தது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் தற்போது வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோவும் ரசிகர்களை கவர்ந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

பிரமாண்ட நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகியுள்ள இந்த படத்தில், படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா, காளி வெங்கட், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.முரளி ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார், சண்டை இயக்குனராக அன்பறிவு முக்கிய பங்கு வகித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
