பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ள ஷிவ் குமார் ஷர்மாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல இசைக்கலைஞரான ஷிவ் குமார் ஷர்மா இன்று காலமானார். அவருக்கு வயது 84. ஜம்முவில் பிறந்த ஷிவ் குமார், சந்தூர் என்கிற இசைக்கருவியை வாசிப்பதில் கைதேர்தவராக விளங்கி உள்ளார். இதனால் இவர் சந்தூர் மேஸ்ட்ரோ என்ற அடைமொழியுடன் அழைத்து வந்தனர். இவர் சில்சிலா, லம்ஹே, சாந்தினி போன்ற இந்தி படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.
இதுதவிர இசைக்கச்சேரிகளிலும் பங்கேற்று வந்த இவர் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சையும் எடுத்து வந்த இவருக்கு இன்று காலை 9 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உயிர் பிரிந்தது. 84 வயதிலும் ஆக்டிவாக இருந்து வந்த ஷிவ் குமார், திடீரென மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இவர் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார். ஷிவ் குமார் ஷர்மாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், பண்டிட் ஷிவ் குமாரின் மறைவால் கலை உலகம் நலிவடைந்துள்ளது. சந்தூர் இசைக்கருவியை உலகளவில் பிரபலமாக்கியவர் அவர். இனி வரும் தலைமுறையினருக்கு அவரது இசை பொக்கிஷமாக அமையும். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Ajith kumar : தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் திறக்கும் அஜித்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து
