MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ajith kumar : தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் திறக்கும் அஜித்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து

Ajith kumar : தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் திறக்கும் அஜித்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து

Ajith kumar : எச்.வினோத் இயக்கும் ஏ.கே.61 படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏ.கே.62 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : May 10 2022, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏ.கே.61 படம் தயாராகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். மேலும் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கொகேன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

24

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 9 ஏக்கரில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

34

இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்க உள்ள ஏ.கே.62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44

இந்நிலையில், ஏ.கே.62 படத்தின் கதை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் நடத்துபவராக நடிகர் அஜித் நடிக்க உள்ளாராம். சாதாரண மனிதராக இருந்து கடின உழைப்பால் முன்னேறும் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் காட்சியளிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... தப்பித்த கோலிவுட்... டோலிவுட், பாலிவுட்டை கதிகலங்க வைத்த ராக்கி பாய் - KGF 2 உடன் மோதிய படங்களெல்லாம் ஃபிளாப்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved