இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தான் இசையமைத்த சுயாதீன பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடலுக்காக தனக்கு ஒரு பைசா கூட வருமானம் வரவில்லை என கூறி உள்ளார்.

சுயாதீன இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மாஜா என்கிற யூடியூப் சேனலை தொடங்கினார். அதில் சுயாதீன இசைக்கலைஞர்களின் பாடல்கள் பதிவேற்றப்படும் என அறிவித்ததோடு, அந்த பக்கத்தில் முதல் பாடலாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் பதிவேற்றப்பட்டது. இப்பாடல் வரிகளையும் அறிவு தான் எழுதி இருந்தார்.

இப்பாடல் வெளியானதும் வைரல் ஹிட் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. அதுமட்டுமின்றி யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பார்வைகளையும் அள்ளியது. இப்பாடல் ரிலீஸ் ஆனபோது தெருக்குரல் அறிவுக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை எனக்கூறி அவருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை.

இதையும் படியுங்கள்... Jason Sanjay: இவரு நம்ப லிஸ்டுலையே இல்லையே பாஸ்! குட்டி தளபதி இயக்கும் படத்தின் ஹீரோ இந்த நடிகரின் மகனாம்!

இந்த நிலையில் என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அதை நெட்டிசன்கள் ஒரு பக்கம் கொண்டாடி வர, மறுபக்கம் அப்பாடலால் தங்களுக்கு ஒரு பைசா கூட லாபம் கிடைக்கவில்லை என பரபரப்பு புகார் ஒன்றை கூறி இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், சம்பந்தப்பட்ட நிறுவனம் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறிய அவர், அவர்களால் தன்னுடைய யூடியூப் சேனலும் திருடப்பட்டு இருக்கிறது என குற்றம்சாட்டி உள்ளார். மேலும் சுயாதீன இசைக்கலைஞர்களுக்கு வெளிப்படைத்தன்மை உடன் கூடிய தனித் தளம் தேவை எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Scroll to load tweet…

தான் மட்டுமின்றி இப்பாடலை அறிமுகப்படுத்திய ஏ.ஆர்.ரகுமானும் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாக கூறிய சந்தோஷ் நாராயணன். தான் மட்டுமின்றி இப்பாடலில் பணியாற்றிய தீ, அறிவு உள்ளிட்டவர்களுக்கு வருமானம் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்ட அவர், தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்கள் வருவதாகவும் பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார். இந்த பிரச்சனையில் தான் பா.இரஞ்சித் மற்றும் அறிவுக்கு முழுவதுமாக ஆதரவு அளிப்பேன் என கூறி இருக்கிறார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... Goundamani Networth: 84 வயதிலும் ஹீரோவாக நடிக்கும்.. காமெடி கிங் கவுண்டமணியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?