santhanu wife keerthi about dance class

பிரபல நடிகரும், இயக்குனருமான் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது வேலையை கையில் எடுத்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும். 

ஆனால் நடனத்தை பல முறை தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார். சமீபத்தில் பிரபுதேவாவுடன், சாந்தனு நடனம் ஆடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரல். தற்போது அவரது மனைவி கீர்த்தியின் வீடியோ ஒன்று டுவிட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அவர் இந்த விடுமுறை நாட்களில் நடன பயிற்சி மையம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளார். இதனை அவரே ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார், இதோ அதன் முழு விவரம் இதோ...

Scroll to load tweet…