விஜய் டிவி புகழுடன் காமெடியில் சந்தானம் கலக்கியுள்ள 'சபாபதி'!! சாட்லைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!
காமெடி நடிகராக ஜெயித்தது மட்டும் இன்றி, நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் சந்தானம் (Santhanam) நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள திரைப்படம் ‘சபாபதி’ (Sabhaapathy). ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.
காமெடி நடிகராக ஜெயித்தது மட்டும் இன்றி, நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள திரைப்படம் ‘சபாபதி’ . ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.
மேலும் செய்திகள்: முதலமைச்சரை கொல்ல திட்டம்.. நடுவிரலைக் காட்டும் சிம்பு… மிரட்டலாய் வெளியானது மாநாடு டிரெய்லர்.!
திரையரங்குகளில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது. சந்தானம் படங்களுக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு மிகப்பெரிய விலைக்கு ‘சபாபதி’ தொலைக்காட்சி உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது.
திக்கு வாயால் அவதிப்படும் வாலிபர் கதாபாத்திரத்தில் முதல் முறையாக இப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். நகைச்சுவை நிறைந்த இந்த திரைப்படத்தில் தந்தை-மகனுக்கிடையேயான உறவு குறித்து அழகாக காட்டப்பட்டுள்ளது. சந்தானத்தின் நடிப்பு மிகவும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து, விஜய் டிவி புகழும் காமெடியில் பட்டையை கிளப்பி உள்ளார்.
மேலும் செய்திகள்: குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவில் சமந்தா - நாக சைதன்யா ஜோடி? முடிவுக்கு வருமா விவாகரத்து வதந்தி..!!
இந்த படத்தில் இவர்களை தவிர எம் எஸ் பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, சுவாமிநாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பாஸ்கர் ஆறுமுகம் கவனிக்க, படத்தொகுப்பை லியோ ஜான் பால் கையாண்டுள்ளார். சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.