முதலமைச்சரை கொல்ல திட்டம்.. நடுவிரலைக் காட்டும் சிம்பு… மிரட்டலாய் வெளியானது மாநாடு டிரெய்லர்.!
அல்லாவும், சிவனும் சேர்ந்து உங்க மூலமா என்னமோ செய்ய நினைக்கிறாங்க. இப்படியான வசனங்கள் கவனம் பெறுகின்றன.
அல்லாவும், சிவனும் சேர்ந்து உங்க மூலமா என்னமோ செய்ய நினைக்கிறாங்க. இப்படியான வசனங்கள் கவனம் பெறுகின்றன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாநாடு திரைப்படத்தின் டிரெய்லரும் மிரட்டலாகவே அமைந்திருக்கிறது. முதலமைச்சர் கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கிறார்.
உங்களுக்காக, உழைத்து, உழைத்து சாகத் தயார் என்று எஸ்.ஏ.சி. வசனம் பேசும்பொழுதே அவர்து நெற்றிப் பொட்டில் சுடுகிறார் சிம்பு. இந்த காட்சி திரும்ப, திரும்ப வருவதால் அழகிய தமிழ் மகன் படத்தில் எதிர்காலத்தில் நடப்பது விஜய்க்கு முன்னரே தெரிவது போல, இப்படத்திலும் அப்படியான டெக்னிக்கை கையாண்டிருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.
போலீஸ் காதாப்பாத்திரத்தில் வரும் எஸ்.ஏ.சூர்யா, தனக்கே உரிய பாணியில் வசனங்களை பேசி மிரட்டியிருக்கிறார். நோலன் படம் போல் குழப்புகிறானே என்ற வசனத்தை டிரெய்லரில் வைத்து கதைக்களத்தை புரிந்துகொள்ள முடியாத அளவில் குழப்பியிருக்கிறது படக்குழு.
தொடக்க காலங்களில் ஒவ்வொரு படத்திலும் விரல் வித்தை காட்டும் சிம்பு, தற்போது மீண்டும் அந்த வித்தையை காட்டியிருக்கிறார். ஆம் டிரெய்லர் முடியும்போது நடிகர் சிம்பு நடுவிரலைக் காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. படம் வெளியானால் தான் அது யாருக்கானது என்பது புரியவரும். யுவனின் பின்னணி இசை மாஸாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.