சந்தானம் ஹீரோவாக காமெடி களத்தில் அட்ராசிட்டி செய்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின், ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

நடிகர் சந்தானம் ஆக்ஷன் நாயகனாக நடிக்கும் படங்கள் இவரை கை விட்டாலும், ஹாரர் மற்றும் காமெடி கதைக்களத்தில் நடிக்கும் படங்கள் காப்பாற்றி வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது சில ஹாரர் சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டு இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில், வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், இரண்டாவது முறையாக பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.

இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து, கெளதம் மேனன், செல்வ ராகவன், மொட்டை ராஜேந்திரன், யாஷிகா, கீர்த்தி திவாரி, கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் பொய்யப்பள்ளி மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். மே 16-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்திற்கு, ஆப் ரோ இசையமைத்துள்ளார். மேலும், தீபக் குமார் பத்தே ஒளிப்பதிவு செய்ய, பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

புதுமையான கதைக்களத்தில் உருவாகியுள்ள, இந்த திரைப்படம்... திரைப்பட விமர்சகர்களை குறிவைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பேய் திரைப்படம் பார்க்க அழைக்கும் நிலையில், அதை பார்க்க செல்பவர்கள் படத்தின் உள்ளே சிக்கி கொள்கிறார்கள். அதில் சந்தானமும், மொட்டை ராஜேந்திரனும் பேயிடம் இருந்து தப்பிக்க போராடுகிறார்கள்?.

ஹீரோவாக மல்லுக்கட்டும் காமெடியன்கள்! சந்தானம், சூரி, யோகிபாபு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

நீ ரிவியூ பண்ணுவதை விட்டுவிடு நான் உன்னை உயிரோடு விடுகிறேன் என செல்வராகவன் கூற... தன்னுடைய வேலையை விட மாறுகிறார் சந்தானம். அதே போல், கெளதம் மேனன்... காக்க காக்க பட சூர்யாவாக மாறி யாஷிகாவுடன் ரொமான்ஸ் பண்ணுவது ஹை லைட்டாக உள்ளது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…