சந்தானத்தின் கம்பேக் படமான ‘டிடி ரிட்டன்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். இப்படத்தை பிரேம் ஆனந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்திருந்தார். மேலும் பெப்சி விஜயன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், தீபா, மாறன், தங்கதுரை என மிகப்பெரிய காமெடி பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த சந்தானம் இப்படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். காமெடி கலாட்டா நிறைந்த பேய் படமான இது ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு மத்தியிலும் திரையரங்கில் ஓடிவரும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Rewind: எம்.ஜி.ஆரை பற்றி தெரிந்திருந்தும் சரோஜா தேவி செய்த செயல்.. கோபமான எம்.ஜி.ஆர்..
அதன்படி டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தானத்தில் காமெடி கலாட்டாக்களை இனி ஓடிடியிலும் பார்க்க முடியும். டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சந்தானத்தின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக கிக் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படமும் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 1-ந் தேதி சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ஓடிடியிலும், கிக் படம் தியேட்டரிலும் ரிலீஸ் ஆக உள்ளதால் அவரது ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா தான்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்தின் அதகளமான வெற்றியை... அலப்பறை இன்றி சிம்பிளாக கொண்டாடிய ரஜினி - வைரலாகும் போட்டோஸ்