Rewind: எம்.ஜி.ஆரை பற்றி தெரிந்திருந்தும் சரோஜா தேவி செய்த செயல்.. கோபமான எம்.ஜி.ஆர்..
எம்.ஜி.ஆர் நடிப்பில் உச்சத்தில் இருந்த போது தனக்கென தனி பழக்கத்தை வைத்திருந்தாராம்.
தமிழ் சினிமாவில் 50களின் காலக்கட்டத்தில் கோலோச்சி வந்தவர் தான் எம்.ஜி.ஆர். பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் எம்.ஜி.ஆரை கொண்டாடி தீர்த்தனர். சினிமாவை பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் பார்க்காமல் அதற்குள் சமூக அக்கறையும், நல்ல கருத்துகளையும் எளிமையாக புகுத்தியவர் எம்.ஜி.ஆர். அதனால் இன்றளவும் புரட்சி தலைவர், பொன்மன செம்மல் என்று அழைக்கப்படுகிறார்.
அந்த வகையில் எம்.ஜி.ஆர் நடிப்பில் உச்சத்தில் இருந்த போது தனக்கென தனி பழக்கத்தை வைத்திருந்தாராம். அதாவது படப்பிடிப்பு நடக்கும் போது எம்.ஜி.ஆரை வைத்து தான் முதல் ஷாட்டை எடுக்க வேண்டுமாம். ஆனால் ஒரு சிலரை தவிர பலருக்கும் இந்த விஷயம் தெரிந்துள்ளது. அந்த வகையில் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் இணைந்த நடித்த சரோஜா தேவிக்கு இந்த விஷயம் தெரியாமல் இருந்தது தான் ஆச்சர்யம். ஆம்.. இந்த விஷயம் தெரியாத சரோஜா தேவி எம்.ஜி.ஆரின் இந்த பழக்கத்தை உடைத்து விட்டார்.
ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆர் ஷாட்டுக்காக தயாராகி கொண்டிருந்தாராம். அப்போது அப்படத்தின் இயக்குனர் ஏ.சி. திருலோகசுந்தர், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அங்கிருந்தனராம். அப்போது அங்கு வந்த சரோஜா தேவி, தனக்கு மாலை வெளியூரில் முக்கியமான மீட்டிங் இருப்பதாகவும், தனது ஷாட்டை முதலில் எடுத்து விடுங்கள் என்று கூறினாராம்.
எம்.ஜி.ஆரின் இந்த கொள்கை பற்றி தெரியாத திருலோகச்சந்தர் மற்றும் சரவணம் இருவரு, சரோஜா தேவியை வைத்து முதல் ஷாட்டை எடுத்து விட்டரார்களாம். ஆனால் மேக்கப் போட்டு விட்டு ரெடியாக வந்த எம்.ஜி.ஆருக்கு செட்டில் இருந்த ஒருவர் இந்த தகவலை கூறி, கோபமடைந்த எம்.ஜி.ஆர் அங்கிருந்து போய்விட்டாராம்.
அதன்பின்னர் எம்.ஜி.ஆர், ஏ.வி.எம் சரவணனிடம் “ முதலாளி நீங்களே இப்படி பண்ணலாமா என்று கேட்டுள்ளார். அதற்குக் சரவணன் “ சரோஜாதேவி சொன்னதால் தான் அப்படி செய்தோம்” என்று கூறினாராம். அப்போது " ஏன் சரோஜா தேவிக்கு இது தெரியாதா? தெரிந்திருந்தும் இப்படி பண்ணிட்டாளே? என்று கோபமாக கேட்டுள்ளார். அதன்பின்னர் ஒரு வழியாக சாந்தமானராம்.. இந்த தகவலை ஏவிஎம் சரவணனே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.