சந்தானம் சன் டிவி சீரியல் நாயகியுடன் ஜோடி சேர்ந்துள்ள.. 80-ஸ் பில்டப் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 80-ஸ் பில்டப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை தற்போது, படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது
காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்து இருப்பவர் சந்தானம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியான படத்தில் நடித்து வரும் சந்தானம், தற்போது 80-ஸ் பில்டப் என்ற நடித்து இருக்கிறார். இந்த படத்தின் சந்தானத்துக்கு ஜோடியாக சன் டிவியில் ஒளிபரப்பான நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் நாயகி ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார்.
கல்யாண் இயக்கி இருக்கும் இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ் காந்த், கூல் சுரேஷ், சூப்பர்குட் சுப்பிரமணி, தங்கதுரை, கும்கி அஸ்வின், நெபு சாமி, கலைராணி என பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
INDIAN IS BACK இன்ட்ரோ வீடியோவை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி கூறிய கமல் ஹாசன்!
நடிகர்கள் மனோபாலா மற்றும் மயில்சாமி நடித்த கடைசி படமாக இது அமைந்து இருக்கிறது. 80-களில் நடக்கும் இந்த படத்தின் கதை ஃபேன்டசி டிராமா-வாக உருவாகி வருகிறது.
1980 காலக்கட்டத்தில் நடைபெறும் கதையம்சம் கொண்டிருப்பதால், இதற்காக உடை, இடம் ஆகியவற்றில் படக்குழுவினர் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றனர். காமெடி கலந்து ஃபேன்டசி டிராமா-வாக உருவாகி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம்... நவம்பர் 24-ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை போல் இந்த படமும் நல்ல வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D