தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. 2010 'பானா காத்தாடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ,  அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல், இரும்புத்திரை, யூ டர்ன்,  உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

லைம் லைட்டில் இருக்கும் போதே, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து 2017 திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் இவர் நடிக்க மாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில், சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் செய்திகள்: டான்ஸ் ஆடுவதில் செம்ம டஃப் கொடுத்த சிறுவன்! என்னை போல் வருவாய் என வாழ்த்திய மிர்ச்சி சிவா! வீடியோ...
 

திருமணம் ஆன பின்பும், தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் சமந்தா, அடுத்ததாக... இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மாற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திலும், 'கேம் ஓவர்' படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

ஆனால், தற்போது இந்த இரு படங்களில் இருந்தும் நடிகை சமந்தா விலகிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அடுத்து ஒரு புது இயக்குனரின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்: படுக்கையறையில் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்ட மீரா மிதுன்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்! வைரலாகும் வீடியோ!
 

எனினும் இந்த படத்தில், சமந்தா மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதால், ஏற்கனவே கமிட் ஆன இரண்டு படங்களிலும் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஒரு படத்திற்காக, இரு தமிழ் படங்களில் இருந்து சமந்தா விலகியதாக வெளியாகியுள்ள தகவலால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதே நேரத்தில், இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்பபடாததால், இதுகுறித்து சமந்தா அல்லது படக்குழு தகவல் வெளியிட்டால் மட்டும் அது நம்பத்தகுந்தது.