தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா, இவரும் நாகர்ஜூனாவின் முதல் மனைவி மகன் நாகசைதன்யாவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர்.

இவர்கள் காதல் கதை வெளிவந்ததும், தங்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் வெகு விமர்சியாக நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் இருவீட்டாருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது, மேலும் இவர்களுடைய திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சமந்தா விஜய், சிவகார்த்திகேயன், விஷால் மற்றும் பகத்பசில் ஆகியோருடன் கமிட் ஆகியுள்ள படங்களை டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விட்டு திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், திருமணத்திற்கு பின் இவர் நடிப்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

ரசிகர்களுக்காக சமந்தா நடிப்பாரா இல்லையா என பொறுத்துதான் பார்க்க வேண்டும்.