பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன்னுடைய குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி உள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
Salman Khan Vinayagar Chaturthi Celebration : சல்மான் கான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோவில், அவர் கணபதி பூஜையில் கலந்து கொண்டபோது எடுத்த காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அவரது குடும்பத்தினர் அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு கணபதியின் ஆசிர்வாதத்தைப் பெற்றனர். இந்த வீடியோ சல்மானின் சகோதரி அர்பிதா கான் ஷர்மாவின் வீட்டில் எடுக்கப்பட்டது. அர்பிதா கான் ஒவ்வொரு ஆண்டும் கணபதி பூஜையை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார். இந்த ஆண்டும் அவரது வீட்டில் கணபதி சிலை வைக்கப்பட்டு, கான் குடும்பத்தினர் மட்டுமல்லாமல், திரைப்படத்துறையைச் சேர்ந்த பலரும் இப்பூஜையில் கலந்து கொண்டனர்.
சல்மான் கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியது ஏன்?
சல்மான் கான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவர் அனைத்து மதங்களையும் மதிக்கிறார். அவரது தந்தை சலீம் கான் இஸ்லாமியராகவும், தாயார் சல்மா கான் இந்துவாகவும் இருப்பதால், அவர் தனது வீட்டை 'மினி இந்தியா' என்று அழைக்கிறார். சல்மானின் இந்த மத நல்லிணக்கம் சிலருக்குப் பிடிக்கவில்லை. இதனால்தான் அவர் இஸ்லாம் மதத்தைத் தவிர வேறு மத நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது, அவர்கள் அவரை விமர்சிக்கின்றனர். கணபதி பூஜையில் கலந்து கொண்டதற்காகவும் அவர் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.

சல்மான் கான் கணபதி பூஜையில் கலந்து கொண்டதைப் பார்த்து ஒருவர், "இது சரியில்லை சகோதரா" என்று எழுதியுள்ளார். மற்றொருவர், "ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான், ஆனால் இணை வைப்பதை மன்னிக்க மாட்டான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். இன்னொருவர், "சல்மான் என்ற பெயர் வைத்திருப்பதால் ஒருவர் முஸ்லிமாகி விட மாட்டார். இன்று அவர் அதை நிரூபித்து விட்டார். வருத்தமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். "எனக்கு இது பிடிக்கவில்லை", "முதுமையில் சில பாவங்களைக் குறைத்துக் கொள்ளலாமே", "சல்மான் கான், நீங்கள் உண்மையிலேயே முஸ்லிமா?", "சல்மான் கானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கண்டனங்கள்" போன்ற கருத்துக்களும் பதிவிடப்பட்டுள்ளன.
இந்த வீடியோவில் சல்மான் கான், அவரது தந்தை சலீம் கான், தாயார் சல்மா கான், சகோதரர்கள் அர்பாஸ் கான், சோஹைல் கான், சகோதரி அல்விரா கான் அக்னிஹோத்ரி, மைத்துனர் அதுல் அக்னிஹோத்ரி, சகோதரி அர்பிதா கான் ஷர்மா, மைத்துனர் ஆயுஷ் ஷர்மா மற்றும் கான் குடும்பத்தினர் மட்டுமல்லாமல், நடிகர்கள் ரிதேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா டிசோசாவும் கலந்து கொண்டுள்ளனர்.
