எல்லார் கையிலும் செல்போன் இருக்கும் இந்த இண்டர்நெட் யுகத்தில் செல்ஃபி எடுப்பது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சில நூறு லைக்குகளுக்காக தங்களது உயிரையும் பணயம் வைக்க பலரும் காத்திருக்கின்றனர். அதற்காக கொடூர விலங்குகள் முன்பு நின்று செல்ஃபி, வேகமாக ஓடும் ரயில் முன்பு நின்றபடியும், படியில் தொங்கிய படியும் செல்ஃபி என ரகரகமாய் செல்ஃபி அட்ராசிட்டி அரங்கேறி வருகிறார். 

அதிலும் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் அனுமதி இல்லாமல், திடீரென பாய்ந்து அவர்கள் முகத்தின் முன்பு செல்போன் கேமராவை காட்டுவது புது பாணி. இதனால் கடுப்பாகும் பிரபலங்கள் பலரும் ரசிகர்களின் செல்போனை தட்டுவிட்டு, கோபமாக சென்றுவிடுகின்றனர். 

இதையும் படிங்க: சென்னையில் இருந்து இதை எல்லாம் வாங்கிட்டு வாங்க... இல்ல வீட்டுக்கே வராதீங்க... ரன்வீர் சிங்கிற்கு தீபிகா போட்ட ஆர்டர்...!

சில மாதங்களுக்கு முன்பு திறப்பு விழாவிற்கு சென்ற நடிகர் சிவக்குமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபரின் செல்போனை கோபத்துடன் தட்டிவிட்டது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியது. அவரே அப்படின்னா... நம்ம சல்மான் கான் சும்மாவே கோபக்காரர். அவர்கிட்ட இப்படி செஞ்சா சொல்லவா வேணும். 

இன்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவா வந்த சல்மான், விமான நிலையத்தில் இருந்து வேக, வேகமாகவெளியேறிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கே நுழைந்த ரசிகர் ஒருவர் சல்மானுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். மனுசர் அப்ப என்ன மூடுல இருந்தாரோ தெரியலை, ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு, சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் வேகமாக நடந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.