கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு, முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதை மையமாக வைத்து '83' என்ற பெயரில் திரைப்படம் உருவாக உள்ளது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார். மதன்லாலாக ஹர்டி சாந்து, கபில்தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.  ஶ்ரீகாந்தாக ஜீவா நடிக்கிறார். 

இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். 

இதையும் படிங்க: "5 முறை தொழுகை செய்யாவிட்டாலும், என் மதத்தின் மீது பற்றுக்கொண்டவன் நான்"... ஷாரூக்கானின் உருக்கமான பேச்சு...!

அப்போது அந்த பதிவில் கமெண்ட் செய்திருந்த தீபிகா சென்னையிலிருந்து திரும்புவதற்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ணாவில் ஒரு கிலோ மைசூர் பாகு, ஹாட் சிப்ஸில் 2 1/2 கிலோ காரமான சிப்ஸ் வாங்கிட்டு வாங்க, இல்லையென்றால் வீட்டிற்கு வரவேண்டாம் என்று பதிவிட்டிருந்தார். 

இதையும் படிங்க: லண்டன் ஓட்டலில் கையும் களவுமாக சிக்கிய நடிகர் ஜீவா... கத்திக் கூப்பாடு போட்டு காட்டி கொடுத்த அலாரம்...!

ரன்வீருக்கு தீபிகா போட்ட இந்த அன்பு கட்டளை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தீபிகாவின் அந்த கமெண்ட்டிற்கு பதிலளித்துள்ள இயக்குநர் கபீர்கானின் மனைவி மினி மாத்தூரும், அவரது கணவரிடம் நீங்களும் இதையெல்லாம் வாங்கிட்டு வர மறந்திடாதீங்க என கமெண்ட் செய்திருந்தார். அதுவும் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.