கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு, முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதை மையமாக வைத்து '83' என்ற பெயரில் திரைப்படம் உருவாக உள்ளது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார். மதன்லாலாக ஹர்டி சாந்து, கபில்தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.  ஶ்ரீகாந்தாக ஜீவா நடிக்கிறார். இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் கபில்தேவ், ரன்வீட் சிங், ஜீவா, கமல் ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் மேடையில் ரன்வீர் சிங்கும், ஜீவாவும் ஒன்றாக இணைந்து கமல் ஹாசன் ஸ்டைலில் நடனமாடினர். 

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஜீவா, ஷூட்டிங்காக லண்டன் சென்ற போது, அங்கிருந்த நட்சத்திர ஓட்டலில் தம் அடித்து மாட்டிக் கொண்டதை கூறினார். வழக்கமாக சொகுசு ஓட்டல்களில் புகைபிடிக்க கூடாது. ஆனால் யாராவது கேட்டால், சொல்லிக்கொள்ளலாம் என தம் அடிக்க ஆரம்பித்தோம். 

அப்போது திடீரென ஸ்டார் ஓட்டலில் இருந்த அலாரம் கதற ஆரம்பிச்சிடுச்சி, உடனே ஓட்டல்காரங்க வந்து, எங்கள வெளிய போக சொல்லிட்டாங்க. அப்புறம் ஒருவழியாக ஸ்ரீகாந்த் மாதிரி பயிற்சி எடுத்துக்கிட்டு, இருந்தேன்னு சொல்லி எஸ்கேப் ஆனேன் என்று தெரிவித்தார்.