சிறு வயதில் தூர்தர்ஷனில் பார்த்து ரசித்த சில சின்னத்திரை தொடர்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட  முடியாது. அதிலும் சூப்பர் ஹீரோ ஸ்டோரி என்றால், சொல்லவே வேண்டாம்.

அந்த வகையில் 90 ஸ் கிட்ஸ்சுகளுக்கு சூப்பர் ஹீரோவாக இருந்தவர் சக்திமான் கதாபாத்திரம். இந்த தொடரை தயாரித்து நடித்தவர், பிரபல நடிகர் முகேஷ் கண்ணா. 

1997 முதல் 2005 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடரை பார்க்க ஞாயிற்று கிழமைகளில் டிவி முன் தவறாமல் அட்டடென்ஸ் போட்டு விடுவார்கள், இப்போது நடுத்தர வயதில் இருக்கும் அப்போதைய குட்டீஸ்.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. மக்களின் பொழுது போக்கிற்காக தூர்தர்ஷன் தொலைக்காட்சி மீண்டும் இராமாயணம், மற்றும் மஹாபாரத தொடரை ஒளிபரப்ப உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.

இதை தொடர்ந்து விரையில், 'சக்திமான்' தொடர் ஒளிபரப்பாகும் என இந்த தொடரில் நடித்த ஹீரோவும்... தயாரிப்பாளருமான முகேஷ் கண்ணா அறிவித்துள்ளார். இந்த செய்தி 90 ஸ் கிட்ஸ்சுக்கு  ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த கால குழந்தைகளும் இது போன்ற தொடர்களை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.