sainna nehwal biography movie taken

சமீப காலமாக பல இயக்குனர்கள், வாழ்க்கையில் போராடி சாதித்த ரியல் ஹீரோக்கள் படங்களை படமாக எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்படி எடுக்கப்பட்ட, "மேரி கோம்", "டோனி", "தங்கள்", "சர்பிஜித் சிங்" ஆகிய படங்கள் இந்தியில் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் வாழ்க்கை வரலாறு படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. 

அதே போல விண்வெளி வீராங்கனை "கல்பனா சாவ்லா" வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாகவும், அதில் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்திய பேட்மிடன் வீராங்கனை "சாய்னா நெவால்" வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. இவருடைய வேடம் ஏற்று நடிக்கப்போவது நடிகை ஸ்ரத்தா கபூர் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் சானியாவுக்கு ட்விட்டர் மூலம்,தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.