குடும்பத்துடன் இருக்கும் இனிமையான சூழலை வெளியிட்ட சாய் பல்லவி...வைரல் போஸ்ட் இதோ
பெற்றோர் மற்றும் சகோதரியுடன் குடும்ப விடுமுறைக்கு என்ஜாய் செய்த சினி பீக் இடம்பெற்றுள்ளது. நட்சத்திரத்தின் இந்த கிளிப்பை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் பெண் கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக வெளியாகி இருந்த கார்கி கலவையான விமர்சங்களை பெற்றது. இந்த படத்தில் சாய் பல்லவி டீச்சராக நடித்திருந்தார். தனது 60 வயதான தந்தையை குழந்தை பாலியல் சீன்டல் புகார் தொடர்பாக கைது செய்யும் போலீசாரிடம் இருந்து எவ்வாறு அந்த புகார் பொய் புகார் என நிரூபித்து தந்தையை மீட்கிறார் என்பதே இந்த படத்தின் முக்கிய கதையாம்சமாக இருந்தது
சூர்யாவின் 2டி நிறுவனம் தமிழ்நாட்டில் கார்கி படத்தை விநியோகம் செய்திருந்தது. ஆனால் படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை மட்டுமே பெற்று இருந்தது. ஆனாலும் நல்ல வசூல் கண்டது. இதை தொடர்ந்து சாய் பல்லவி ராஜ்குமார் பெரியசாமியின் பெயரிடப்படாத புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சாய்பல்லவி. சிவகார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு...அக்கா மகளை காப்பாற்றினால் ...கூல் சுரேஷை விட சிம்புவிற்கு அதிகமாக குரல் கொடுப்பேன் : விஜயலட்சுமி
எஸ்கே 21 என்று பெயரிடப்பட்டுள்ள இதில் சமீபத்தில் தான் இணைந்திருந்த சாய்ப்பல்லவி குறித்து, வெல்கம் சாய் பல்லவி ஒரு சூப்பர் திறமையான நடிகையுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று ட்வீட் செய்திருந்தார் சிவகார்த்திகேயன். இவர்களின் முதல் ஒத்துழைப்பு இந்த படமாகும். இதைத்தொடர்ந்து தனது வாழ்த்துக்களை டான் படத்திற்கு அனுப்பி இருந்த சாய் பல்லவி உங்களைப் போன்ற கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ள ஒருவருடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்திருந்தார். இதோடு இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா நடிக்கும் புஷ்பா தி ரூலில் சாய் பல்லவி முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் பரவி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...விக்ரம் முதல் பொன்னியின் செல்வன் வரை.. OTT உரிமை மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் விற்கப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ
இந்நிலையில் தனது குடும்பத்துடன் குதூகலமாக சுற்றுலா சென்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் சாய்ப்பல்லவி. பெற்றோர் மற்றும் சகோதரியுடன் குடும்ப விடுமுறைக்கு என்ஜாய் செய்த சினி பீக் இடம்பெற்றுள்ளது. நட்சத்திரத்தின் இந்த கிளிப்பை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.