விக்ரம் முதல் பொன்னியின் செல்வன் வரை.. OTT உரிமை மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் விற்கப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ
விக்ரம், ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப் 2, ஜவான், பொன்னியின் செல்வன் ஆகிய 5 படங்களின் ஓடிடி உரிமைகள் எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. அதிலேயே புதுப்படங்கள் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டும் வருகின்றன. அதுமட்டுமின்றி தற்போது ரிலீசாகும் படங்களின் ஓடிடி உரிமைகள் பெரிய அளவிலான தொகை கொடுத்து வாங்கப்படுகின்றன. அந்தவகையில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட டாப் 5 படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆர்.ஆர்.ஆர்
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் மற்றும் ஜீ5 நிறுவனங்கள் கைப்பற்றின. மொத்தம் ரூ.325 முதல் ரூ,350 கோடி வரை இப்படத்தின் ஓடிடி உரிமை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கே.ஜி.எஃப் 2
2022-ம் ஆண்டு ரிலீசாகி மெகா ஹிட் ஆன படங்களில் கே.ஜி.எஃப் 2-வும் ஒன்று. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசானது. யாஷ் நாயகனாக நடித்திருந்த இப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ.320 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அமேசான் பிரைம் நிறுவனம் இப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது.
இதையும் படியுங்கள்... கூலிங் கிளாஸ் போட்டு ஐஸ்வர்யா ராயுடன் கூலாக செல்ஃபி எடுத்த பார்த்திபன் - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்
ஜவான்
அட்லீ இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் படம் ஜவான். ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதால் இப்படத்தின் பிசினஸும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அடுத்தாண்டு ரிலீசாக உள்ள இப்படத்தின் ஓடிடி உரிமையை தற்போதே ரூ.250 கோடி கொடுத்து கைப்பற்றிவிட்டதாம் நெட்பிளிக்ஸ் நிறுவனம்.
விக்ரம்
தமிழில் இந்த ஆண்டு ரிலீசான படங்களிலேயே மாபெரும் வசூல் சாதனை படைத்த படம் என்றால் அது கமலின் விக்ரம் படம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த ஜூன் மாதம் ரிலீசானது. 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த இப்படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.125 கோடிக்கு வாங்கியுள்ளது.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர படமான பொன்னியின் செல்வன் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் இப்படத்தின் முதல் பாகத்திற்கான ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.125 கோடிக்கு வாங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... கியூட் லுக்கில் திரிஷா.. மாஸ் கெட்-அப்பில் விக்ரம்- பொன்னியின் செல்வன் நட்சத்திரங்களின் எக்ஸ்குளூசிவ் கிளிக்ஸ்