கியூட் லுக்கில் திரிஷா.. மாஸ் கெட்-அப்பில் விக்ரம்- பொன்னியின் செல்வன் நட்சத்திரங்களின் எக்ஸ்குளூசிவ் கிளிக்ஸ்
பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக மும்பை சென்றுள்ள படக்குழுவின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி உள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். முதல் பாகம் இன்னும் 4 நாட்களில் ரிலீசாக உள்ளது. அடுத்த பாகம் அடுத்தாண்டு வெளியிடப்பட உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடித்துள்ளனர்.
அதேபோல் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும், நந்தினியாக நடிகை ஐஸ்வர்யா ராயும், பூங்குழலியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்திருக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் ஒரு பக்கம் பிசியாக நடைபெற்று வருகிறது.
அதன்படி கடந்த வாரம் திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற் பிரம்மாண்ட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள்.
இதையடுத்து மும்பை சென்ற பொன்னியின் செல்வன் படக்குழு அங்கு இரண்டு நாட்களாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
நேற்று மும்பை ஜுஹு பகுதியில் அமைந்துள்ள மேரியட் ஹோட்டலில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி நடிகைகள் திரிஷா, ஷோபிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது எடுக்கப்பட்ட எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அவற்றுள் சில அழகிய புகைப்படங்கள் தான் இந்த தொகுப்பில் பார்த்தோம்.