அக்கா மகளை காப்பாற்றினால் ...கூல் சுரேஷை விட சிம்புவிற்கு அதிகமாக குரல் கொடுப்பேன் : விஜயலட்சுமி
தனது அக்கா மகள் சிம்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாகவும் அவருக்கு உதவி செய்தால் கூல் சுரேஷை விட அதிகமாக சிம்புவிற்காக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார் விஜயலட்சுமி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநாடு படம் சிம்புவிற்கு மிகப்பெரிய வெற்றிகளை தேடி தந்தது. இதை அடுத்து தற்போது வெளியாகி உள்ள வெந்து தணிந்தது காடு சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக சிம்பு -கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி அமைந்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.
முன்னதாக நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து அதிரடி காட்டி இருந்தார். மாநாடு படத்திற்குப் பிறகு சிம்புவிற்கு ரசிகர் பட்டாளம் அதிகமாகிவிட்டது. அதில் குறிப்பிடத்தக்கவர் கூல் சுரேஷ். இவர் மாநாடு படத்தில் இருந்து சிம்புவிற்காக எப்போதும் அதிக குரல் கொடுத்து வருகிறார். ஆனால் வெந்து தணிந்தது காடு வெளியானதும் அவருக்கு ஏகபோக விமர்சனங்கள் வரத் துவக்கிவிட்டது. இதுகுறித்து கண்ணீர் மல்க சமீபத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் கூல் சுரேஷ்.
மேலும் செய்திகளுக்கு...விக்ரம் முதல் பொன்னியின் செல்வன் வரை.. OTT உரிமை மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் விற்கப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ
இந்நிலையில் அவரது வீடியோவை குறிப்பிட்டு நடிகை விஜயலக்சுமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது அக்கா மகள் சிம்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாகவும் அவருக்கு உதவி செய்தால் கூல் சுரேஷை விட அதிகமாக சிம்புவிற்காக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார் விஜயலட்சுமி. அதாவது தனது அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது மகனை கவனிக்க இயலாது போனது இதனால் சிம்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஜெயப்பிரதாவின் வீட்டில் அவரது மகள் இருக்கிறாளாம், அவருக்கு உதவி செய்தால் தான் சிம்புவிற்காக 10மடங்கு அதிகமாக ஆதரவு தெரிவிப்பேன் என கூறியுள்ளார். விஜயலட்சுமி முன்னதாக சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் மீது மீடு புகார் கூறியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கூலிங் கிளாஸ் போட்டு ஐஸ்வர்யா ராயுடன் கூலாக செல்ஃபி எடுத்த பார்த்திபன் - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்