தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள படம் லவ் ஸ்டோரி. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான அழகான காதல் கிராமத்தில் தொடங்கி நகரத்தை நோக்கி நகருவது போன்ற கதைக்களத்துடன் படம் உருவாகியுள்ளது. பக்கா தெலங்கானா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த படத்திற்காக இயக்குநர் நடிப்பு பட்டறைகள் எல்லாம் நடத்தி, ஹீரோ நாக சைதன்யாவிற்கு பயிற்சி அளித்தார். 

இதையும் படிங்க: ராமாவரம் தோட்டத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர். புரட்டி எடுத்தாரா?... வெளியானது பகீர் உண்மை...!

ஏ.ஆர்.ரகுமானின் மியூசிக் ஆல்பத்தை தயாரித்த பவன் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் ஒரு சூப்பர் ரொமாண்டிக் சாங்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: செம்ம டைட் டிரஸில்... முன்னழகு தெரிய படுகவர்ச்சி போஸ்... பிக்பாஸ் அபிராமியின் கன்றாவி போட்டோஸ்...!

ஏய் பில்லா என தொடங்கும் அந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு காட்சியில் நாக சைதன்யாவின் கன்னத்தில் சாய் பல்லவி அழுத்தி முத்தமிடுவார். அதுக்கு நாக சைதன்யா கொடுப்பார் பாருங்க ஒரு ரியாக்‌ஷன் சான்ஸே இல்ல. 

செம்ம ரொமாண்டிக் அம்சங்களை உள்ளடக்கிய இந்த பாடலில், வழக்கம் போல எவ்வித மேக்கப்பும் இல்லாமல் எதார்த்தமாக நடித்துள்ள சாய் பல்லவியை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.