நடிகை சாய் பல்லவி தன்னுடைய அழகுக்காக இரண்டு மேக்கப் பொருட்களை மட்டும் பயன்படுத்துவாராம். அது என்ன என்பதை பார்க்கலாம்.

Sai Pallavi Beauty Secret : நேச்சுரல் பியூட்டி என தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் சாய் பல்லவி. சினிமா, மேக்கப்னு எல்லாத்துலயும் அவருக்கென ஒரு தனி பாணி உண்டு. வாய்ப்பு கிடைச்சாப் போதும்னு எந்தப் படத்திலயும் நடிக்க மாட்டார். நல்ல கதை, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம்னா மட்டும்தான் நடிப்பார். மேக்கப் போட்டுக்கிட்டு, நவநாகரிக உடைகள்ல வலம் வர்றது இல்ல. அப்படிப்பட்ட சாய் பல்லவி ரெகுலரா பயன்படுத்தற ரெண்டு மேக்கப் பொருட்கள் என்னன்னு பார்க்கலாம்.

சினிமாவில் சாய் பல்லவி எந்த அளவுக்கு எளிமையானவரோ, அதே அளவுக்கு மேக்கப் விஷயத்திலயும் எளிமையாத்தான் இருப்பார். படப்பிடிப்புக்கு முகம் கழுவிட்டு வந்துடுவேன்னு ஒரு பேட்டில சொல்லியிருக்கார். கார்கி, விராட பர்வம் படப்பிடிப்புல இதைச் சொன்னப்போ, அது வைரல் ஆச்சு. "இந்தப் படங்கள்ல நான் மேக்கப் போடல. முகம் கழுவிட்டு வந்தேன் அவ்வளவுதான்"னு சிரிச்சுக்கிட்டே சொல்லி இருந்தார் சாய் பல்லவி.

சாய் பல்லவி பயன்படுத்தும் அந்த 2 பொருள் என்ன?

அவரின் ஹேண்ட் பேக்கில் எப்பவும் ரெண்டு மேக்கப் பொருட்கள் இருக்குமாம். அதுவும் ஐ-லைனர், மாய்ஸ்சரைசர் மட்டும் தான். அவர் தன்னுடைய அழகுக்காக க்ரீம், ஃபவுண்டேஷன் எதையும் பயன்படுத்துறதில்லையாம். சருமம் வறண்டு போகாம இருக்க மாய்ஸ்சரைசர், இரவு நேரப் படப்பிடிப்புல கண்கள் அழகா தெரியணும்னு ஐ-லைனர் மட்டும்தான் பயன்படுத்துவாங்களாம்.

கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி ஹேர் ஸ்டைல் மாத்திக்கிட்டு நடிப்பார் சாய் பல்லவி. பொதுவாக சுருட்டை முடியிலதான் அதிகமா நடிச்சிருக்கார். கதைக்குத் தேவைப்பட்டா, ஸ்ட்ரைட் ஹேர் ஸ்டைலுக்கு மாறிடுவார். சமீபத்துல சிவகார்த்திகேயன் கூட நடிச்ச 'அமரன்' படம் சூப்பர் ஹிட். 300 கோடிக்கு மேல வசூல் பண்ணியது. நாக சைதன்யா கூட நடிச்ச 'தண்டேல்' படம் 100 கோடிக்கு மேல வசூல் பண்ணி ஹிட் ஆச்சு. இப்போ பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

பாலிவுட்ல பிரம்மாண்டமா ராமாயணம் படம் தயாராகுது. ரன்பீர் கபூர் ராமரா நடிக்க, சாய் பல்லவி சீதையா நடிக்கிறாங்க. படப்பிடிப்பு வேகமா நடந்துட்டு இருக்கு. சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள்ல வைரல் ஆகியிருக்கு. இந்தப் படம் பான் இந்தியா ஹிட் ஆனால், சாய் பல்லவிக்கு பாலிவுட்ல நிறைய வாய்ப்புகள் வரும் என கூறப்படுகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாம்.