சாய் பல்லவியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன?
Life Lessons to Learn From Sai Pallavi : நடிகை சாய் பல்லவியிடமிருந்து, கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.

சாய் பல்லவியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்
Life Lessons to Learn From Sai Pallavi : பிரேமம் படம் மூலமாக அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாரி 2 நல்ல வரவேற்பு கொடுத்த போதிலும் அமரன் படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வரும் சாய் பல்லவிவியின் இயற்கை பேரழகிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த எளிமையான அழகியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள் என்று ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அது என்னென்ன என்று பார்க்கலாம்.
இயல்பான தன்மையை பாதுகாத்தல்
சாய் பல்லவி தனது இயற்கையான அழகு மற்றும் சினிமா கதாபாத்திரத் தேர்வுகளுக்கு பிரபலமானார். அவர் எப்போதும் தான் எப்படி இருக்கிறாரோ அப்படியே சினிமாவிலும் தோன்றுகிறார். தொழில்துறைக்கு பொருந்துவதை விட தனது மதிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார். மேக்கப் இல்லாமல் நடிக்க விரும்பக் கூடியவர். சினிமாவில் இப்படிப்பட்ட நடிகையை காண்பது என்பது அரிதான ஒன்று.
கல்வியை முக்கியமாகக் கருதல்
என்னதான நட்சத்திர நடிகையாக இருந்தாலும் சாய் பல்லவி, கல்வியை பாதியில் விடவில்லை. அவர் எம்பிபிஎஸ் படித்துள்ளார். நடிகையாக இருந்தாலும் கல்வியை முடித்திருப்பதைப் பார்த்தால், அவருக்கு கல்வியுடன், ஆர்வத்தைப் பின்பற்றுவதும் பிடிக்கும் என்பது தெரிகிறது.
வந்த வழியை மறக்கவில்லை
சாய் பல்லவி பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், அவர் வந்த பாதையை, தனது சிறிய கிராமத்தை எதையும் மறக்கவில்லை. தனது பணி நெறிமுறைகள் மற்றும் வளர்ச்சிக்காக அவர் எப்போதும் தான் வந்த பாதையை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறார்.
கலைப்பணிக்கு உள்ள உண்மை அர்ப்பணிப்பு
டான்ஸ் தான் சாய் பல்லவியின் முதல் காதல். ஒரு நடிகைக்கு தேவையான அழகும், அர்ப்பணிப்பும் அவரிடம் நிறையவே இருக்கிறது. டான்ஸிற்கு காட்டும் அர்ப்பணிப்பு ரொம்பவே தனிப்பட்டது. சாய் பல்லவி சிறந்த நடனக் கலைஞர் மற்றும் நடிகை. அவர் தனது இந்தப் பயிற்சிகளை பள்ளி, கல்லூரி நாட்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இருந்தே தொடர்ந்து வந்துள்ளார். அவருக்குக் கிடைத்த எந்தவொரு வாய்ப்பையும் வீணாக்கவில்லை. பாசமும் உழைப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படுகின்றன என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
தன்னம்பிக்கை என்பதை சாய் பல்லவி ஒரேயடியாகப் பெற்றவர் அல்ல, ஆரம்பத்தில் மேடை பயத்தால் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இன்று எது வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்.
அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள்:v
சாய் பல்லவி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவையே, அது பிரேமம் மலர், கார்கி, ராமாயணத்தின் சீதை என சாய் பல்லவி நடித்த கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
தோல்வியை மிதித்து வெற்றி பெற்றார்:
சாய் பல்லவி பிரபலமான பிறகும் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெறவில்லை, சில படங்களில் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தன்னம்பிக்கை மட்டும் குறையவில்லை. தோல்வியில் அழாமல் திடமான நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் முன்னேறினார் சாய் பல்லவி, இதே தன்னம்பிக்கை ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டும்.
நேர்மையும் எளிமையும்
சாய் பல்லவியிடமிருந்து பின்பற்ற வேண்டிய முக்கியமான பாடங்களில் ஒன்று நேர்மை மற்றும் எளிமை. எப்போதும் எளிமயாக இருக்க கூடியவர். அதுமட்டுமின்றி என்னதான விளம்பரங்களுக்காக பெரிய தொகைகள் சம்பளமாக கொடுக்கப்பட்டாலும் தவறான கருத்துக்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் அவர் நடிக்க மறுத்துள்ளார். இதற்கு சிறந்த உதாரணமே முகப்பொலிவு கிரீம்ஸ் (fairness creams)
மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது
சாய் பல்லவி மிகச் சாதாரண வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கிறார். என்னதான நடிகையாக இருந்தாலும் அவர் எப்போதும் சமூக வலைதளங்களில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டது கிடையாது. தான் உண்டு தனது நடிப்பு, டான்ஸ் உண்டு என்று இருக்கிறார். மனநலம் மற்றும் உள் அமைதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.