மலையாளத்தில் 'பிரேமம்' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி.  இவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பிறகு, தமிழ், தெலுங்கில், மொழி படங்களில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. 

மலையாளத்தில் 'பிரேமம்' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. இவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பிறகு, தமிழ், தெலுங்கில், மொழி படங்களில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு தமிழில் தியா என்ற படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்தார். அதன்பிறகு தற்போது தனுஷ் ஜோடியாக மாரி 2 படத்தில் ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் NGK படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் சாய் பல்லவி நக்சலைட்டாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கதாநாயகனாக நடிகர் ராணா நடிக்கிறார். போலீஸ் அதிகாரிக்கும்.. பெண் நக்சலைட்டுக்குமான காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. 

மேலும் அதிரடி சண்டைக்காட்சிகளும் அரசியல் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற உள்ளது. அதே போல் நக்சலைட்டாக சாய் பல்லவி நடிப்பதற்கு விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. கதாநாயகியாக வளர்ந்து வரும் நிலையில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவி ஒப்புக்கொண்டதை சக நடிகர்களும் ரசிகர்களும் ஆச்சர்யமாக பார்கிறார்கள் கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டாராம் சாய் பல்லவி விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.