'தி கேரளா ஸ்டோரி' படத்தில் சிவன் குறித்து எழுந்த சர்ச்சை கேள்விக்கு... அன்றே சத்குரு அளித்த சாமர்த்திய பதில்
சத்குருவின் பழைய வீடியோ கிளிப் ஒன்று, சுதிப்தோ சென் இயக்கிய “தி கேரளா ஸ்டோரி” பற்றிய சமீபத்திய சர்ச்சையுடன் சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கேரளாவில் இந்துப் பெண்களை மத மாற்றம் செய்து அவர்களை ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக குறிப்பிட்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி. சுதிப்தோ சென் இயக்கியுள்ள அந்தப்படத்தில் தனது இந்து நண்பரை மதம் மாற்றும் நோக்கத்தில், ஒரு முஸ்லீம் பெண் சிவபெருமானை கேலி செய்யும் வண்ணம் “மனைவி இறந்தவுடன் சாதாரண மனிதனைப் போல அழுகிறவன் எப்படி கடவுளாக முடியும்?” எனகிற வசனம் இடம்பெற்று இருக்கும்.
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் போது கேட்கப்பட்ட இதே போன்ற ஒரு கேள்விக்கு சத்குரு பதிலளித்திருந்தார். அவர் அளித்த இந்த பதில் தற்போது பல யூடியூப் சேனல்களால் எடுக்கப்பட்டு, சத்குருவின் "காவிய பதில்" என சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரையிடாததற்கு இது தான் காரணம்.! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
அதன்படி சத்குருவிடம் “சிவன் சதியை இழந்தபோது துக்கமடைந்ததாக அறியப்படுகிறது. சிவனைப் போன்ற ஒரு தெய்வீக சக்தி கொண்டவர் எப்படி சோகமாக மாறினார்? என ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சத்குரு அளித்த பதில் :“அவரை என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள்? ஒரு எதிர்பாராத சம்பவத்தில், அவரது மனைவி உயிருடன் எரிக்கப்பட்டார். நீங்கள் யாரோ ஒருவர் கருகி இறந்து கிடப்பதைப் பார்ப்பதற்கும், நீங்கள் நேசிக்கும் ஒருவர், நெருப்பில் சிக்கி எரிவதை பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, உங்கள் அன்பான மனைவி உயிருடன் எரிக்கப்பட்டபோது, அவரை என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
“அவர் துக்கப்படாவிட்டால், நான் அவரை தெய்வமாகவே கருதமாட்டேன். அதுவே உயிரற்ற வழி. மரங்கள் கூட சில நேரங்களில் துக்கம் ஏற்படும் போது இரத்தம் சிந்துகின்றன. விலங்குகளும் வருந்துகின்றன. அதைவிட சிவன் குறைவு என்று நினைக்கிறீர்களா? இல்லை! அவரது துக்கம் மிகவும் தீவிரமானது, ஆனால் அவர் அதில் சிக்கவில்லை.
"ஆம், அவருக்கு ஒரு குறுகிய காலத்தில் கடுமையான துக்கம் ஏற்பட்டது, அவர் மனிதாபிமானமற்றவர் அல்ல என்பதால் அவரை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் என்னைக் கேட்டால் அவர் ஒரு சூப்பர் ஹியூமன், அதனால் அவருக்குள் எல்லாமே உயர்ந்திருக்கிறது,” என்று சத்குரு பேசி உள்ளார். அவரின் இந்த தெளிவான பதில் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... முதலில் படத்தை பாருங்க.. அப்புறம் பேசுங்க! தி கேரளா ஸ்டோரி நடிகை அதா ஷர்மா ஓப்பன் டாக்