Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரையிடாததற்கு இது தான் காரணம்.! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தமிழக மக்களிடையே வரேவற்பு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்கள் படத்தை திரையிடவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

Tamil Nadu Government explains why Kerala Story is not screened in Tamil Nadu
Author
First Published May 16, 2023, 10:21 AM IST

சர்ச்சையை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி

கேரளவில் இந்து மதத்தை  சேர்ந்த பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பின்னர்  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைக்கப்படுவதாக கூறி "தி கேரளா ஸ்டோரி" என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது. இதனையடுத்து அந்த திரைப்படத்தை மேற்கு வங்கத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது. அதேபோல தமிழகத்தில் ஒரு சில திரையரங்கில் முதல் இரண்டு நாள்கள் வெளியானது. அப்போது தமிழக அரசு சார்பாக திரையர்ங்கிற்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கியது. இந்த பரபரப்பான நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் அத்திரைப்படத்தை திரைப்படத்தை திரையிடுவதில்லை என முடிவெடுத்தனர்.

Tamil Nadu Government explains why Kerala Story is not screened in Tamil Nadu

தமிழகத்தில் திரையிடாதது ஏன்.?

இதற்கு எதிராக "தி கேரளா ஸ்டோரி" திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு, தடை விதித்தது தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும்  தமிழகத்தில் திரைப்படம் வெளியான திரையரங்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது, அதில், தமிழ்நாட்டில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்யவில்லை என்றும், மாநிலம் முழுவதும் மொத்த 19 திரையரங்குகளில் அத்திரைப்படம் வெளியிடப்பட்டது.

Tamil Nadu Government explains why Kerala Story is not screened in Tamil Nadu

படத்திற்கு வரவேற்பு இல்லை

அப்போது  அத்திரையரங்குகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்துக்கு தமிழக மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தாலும், பெரிய நடிகர்கள் இல்லாத காரணத்தாலும் பொதுமக்கள் திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தான்  திரையரங்க உரிமையாளர்களே படத்தை திரையரங்குகளில் திரையிடாததோடு, திரையரங்குகளில் அந்த படத்தை நீக்கி விட்டு வேறு படத்தை திரையிடுவதாக தெரிவிக்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்படது.  எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது என பிரமாண பத்திரத்தில்  தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

வேலைக்கு பணம் பெற்ற விவகாரம்.! இன்று தீர்ப்பு- அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செக் வைக்குமா உச்சநீதிமன்றம்

Follow Us:
Download App:
  • android
  • ios