Asianet News TamilAsianet News Tamil

பணம் வாங்காமல் வாக்களிக்க சொன்ன நீங்கள் விஜய் மது, புகைக்கு எதிராக பேசாதது ஏன்?சு.ஆ.பொன்னுசாமி கேள்வி!

ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க சொன்ன விஜய் மது, புகைக்கு எதிராக பேசாதது ஏன்...? என பால் முகவர்கள் சங்கம் சார்பில் சு.ஆ பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளதுடன் வேண்டுகோள் ஒன்றியும் வைத்துள்ளார்.
 

SA Ponnusamy questions why actor Vijay does not  speak out against drinking and smoking
Author
First Published Jun 17, 2023, 7:36 PM IST

விஜய்யின் பேச்சு குறித்து பால் முகவர்கள் சங்கம் சார்பில்  சு.ஆ பொன்னுசாமி கூறியுள்ளதாவது, "திரைப்படங்களில் நடித்தோம், கோடிகளில் பணம் சம்பாதித்தோம் என்றில்லாமல், வளரும் தலைமுறையினரை வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாக கருதாமல், அவர்களை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நடைபெற்று முடிந்த பள்ளி பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு விழா எடுத்து, அவ்விழாவில் சட்டமன்ற தொகுதி வாரியாக மூவரை தேர்வு செய்து பரிசும், விருந்தும் அளித்து பாராட்டியுள்ளதோடு, "ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என உங்கள் பெற்றோர்களிடம் சொல்லுங்க, நீங்க சொன்னா அவங்க கேட்பாங்க, ஏன்னா மாணவர்கள் தான் நாளைய வாக்காளர்கள்," அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றி படியுங்கள் என பேசியுள்ள நடிகர் விஜய் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதார பாராட்டுகிறது. 

SA Ponnusamy questions why actor Vijay does not  speak out against drinking and smoking

உதவி செய்வதை கூட இப்படி நினைத்தால்... விஜய்க்கு அனுதாபங்கள்! வைகை செல்வன் பரபரப்பு ட்வீட்!

அதே சமயம் இளம் தலைமுறையை தவறான வழிக்கு கொண்டு செல்லும், சமுதாயத்தை சீரழித்து வரும் "மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற விசயங்களிலும் அவற்றை செய்யாதீர்கள் என பெற்றோர்களிடம் குறிப்பாக உங்கள் தந்தையிடம் கூறுங்கள், நீங்க அழுத்தி சொன்னா அப்பாக்கள் கண்டிப்பாக கேட்பாங்க" எனக் மாணவச் செல்வங்கள் மத்தியில் வலியுறுத்தி பேசாதது ஏமாற்றமே. ஏனெனில் தங்களின் முன்மாதிரியாக நடிகர்களின் நடிப்பை நம்பி அதனை அப்படியே பின்பற்றி தங்களை விட்டில் பூச்சிகள் போல அழித்துக் கொள்ளும் வகையில் பல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரே மது, புகை பழக்கத்திற்கு அடிமையாகி, தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சூழலுக்கு விஜய் போன்ற முன்னணி நடிகர்களே காரணம் என்றால் அது மிகையில்லை.

SA Ponnusamy questions why actor Vijay does not  speak out against drinking and smoking

நெகட்டிவ் விமர்சனங்களை நீக்க 5500 முதல் 9500 வரை பேரம் பேசுகிறதா 'ஆதிபுருஷ்' படக்குழு? பகீர் குற்றச்சாட்டு!

எனவே வருங்கால இளம் தலைமுறை நன்றாக இருக்க வேண்டும், அதற்கு படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும் என கவலைப்படும் நடிகர் விஜய் அவர்களின் கவலை உண்மையாக இருக்குமானால் சமுதாயத்தை சீரழித்து வரும் மது குடிப்பது, ஸ்டைலாக புகை பிடிப்பது போன்ற காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் இனி வருங்காலங்களில் நடித்து இளம் தலைமுறையினர் தவறான வழி செல்ல நானே காரணமாக இருக்க மாட்டேன் என்று மற்ற முன்னணி நடிகர்களுக்கெல்லாம் முன்மாதிரி நடிகராக பொதுவெளியில், ஊடகங்கள் முன் உறுதிமொழி கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது. அவ்வாறு அவர் பொதுவெளியில் உறுதிமொழி கொடுக்க, எடுக்க தவறினால் இன்றைய தினம் (17.06.2023) மாணவர்கள் மத்தியில் பேசியது வெறும் விளம்பரத்திற்கான படப்பிடிப்பாக மட்டுமே இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் என கூறியுள்ளார்.

SA Ponnusamy questions why actor Vijay does not  speak out against drinking and smoking

உங்க கைய வச்சு உங்க கண்ணை குதிக்காதீங்க! மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்து விஜய் பரபரப்பு பேச்சு!

மேலும் நேற்றைய தினம் விஜய்யின் லியோ படத்தின் போஸ்டர் வெளியான போது, அதில் விஜய் வாயில் சிகரெட் வைத்து கொண்டு நடித்திருந்ததை, விமர்சிக்கும் விதமாக பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் போட்டிருந்த நிலையில், அவரை தொடர்ந்து பால் முகவர்கள் சங்கமும் இதோ விஷயத்தை திரும்ப கூறியுள்ளதால், தளபதி விஜய் மாணவர்கள் மத்தியில் இந்த டாபிக் குறித்து பேசுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios