‘காஃபி வித் காதல்’ படத்துக்காக இளையராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்த யுவன் - வைரலாகும் வீடியோ
Coffee With Kadhal : சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காஃபி வித் காதல்’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
காமெடி படங்கள் இயக்குவதில் கில்லாடி இயக்குனரான சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்கள் மீது கவனத்தை செலுத்தினார். இவர் இயக்கிய அரண்மனை என்கிற பேய் படம் இதுவரை 3 பாகங்களாக வெளிவந்தது. இதில் முதல் இரண்டு பாகங்கள் வரவேற்பை பெற்றாலும், கடந்தாண்டு வெளியான மூன்றாம் பாகம் படு தோல்வி அடைந்தது.
இதையும் படியுங்கள்... காதல் மனைவி நயன்தாரா உடன் காத்துவாக்குல ரொமான்ஸ் பண்ணும் விக்னேஷ் சிவன் - வைரலாகும் போட்டோஸ்
இதனால் பேய் கதைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, மீண்டும் தனது காமெடி ஜானரை கையில் எடுத்துள்ளார் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் தற்போது காஃபி வித் காதல் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். அவர்களுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர், மாளவிகா மேனன், சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... Dil Raju : 51 வயதில் தளபதி 66 பட தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு பிறந்த வாரிசு - குவியும் வாழ்த்துக்கள்
இதுதவிர தொகுப்பாளினி டிடி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரைசா வில்சன், மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவாகி உள்ள ரம்பம் பம் என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள்... 42 வயதிலும் குறையாத கவர்ச்சி... பிகினி உடையணிந்து கடலில் மிதக்கும் வாளமீனு மாளவிகா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
இது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்துக்காக இளையராஜா இசையமைத்த ‘ரம்பம் பம் ஆரம்பம்’ பாடலின் ரீமேக் ஆகும். யுவன் இதற்கு முன் டிக்கிலோனோ படத்துக்காக ‘பேர் வச்சாலும்’ என்கிற எவர்கிரீன் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார். இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரல் ஆன நிலையில், தற்போது அதேபாணியை காஃபி வித் காதல் படத்துக்காக பின்பற்றி உள்ளார்.