லாரன்ஸின் 'ருத்ரன்' பட ரிலீஸ் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், கிருஸ்துமஸ் வெளியீடாக வரவிருந்த, 'ருத்ரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீர் என மாற்றப்பட்டுள்ளதாக தற்போது தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
'காஞ்சனா' படத்திற்கு பின், லாரன்ஸ் 'ருத்ரன்', 'சந்திரமுகி 2' ஆகிய படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இதில் 'ருத்ரன்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு முடிக்கப்பட்டு போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில், ராகவா லவ்ரான்சுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், சரத்குமார் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 5 ஸ்டார் கிரேஷன் நிறுவனர் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார்.
இந்த திடரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி திடீர் என மாற்றட்டுள்ளதாகவும், அதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார் இயக்குனரும், தயாரிப்பாளருமான கதிரேசன்.
மேலும் செய்திகள்: மெல்லிய இடையை காட்டி மெர்சலாக்கும் மாளவிகா மோகனன்..! ஜிகு ஜிகு உடையில் ஜிவ்வுனு ஈர்க்கும் போட்டோஸ்..!
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... "எங்களது நிறுவனத்தின் வெற்றி படைப்புகளான 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா', 'டைரி', வெற்றிப்பட வரிசையில் அடுத்து வருவது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ருத்ரன்' திரைப்படம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
'காஞ்சனா' திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படம் 'ருத்ரன்' என்பதால், ராகவா லாரன்ஸ் அவர்களின் ரசிகர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை முழு திருப்திப்படுத்தும் விதமாக படத்தின் நிறைவு பணிகள் நடைபெற்று வருகிறது. 'ருத்ரன்' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட ஏற்கனவே அறிவிக்க பட்டிருந்த நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைய சில மாதங்கள் தேவைப்படுவதால், ராகவா லாரன்ஸ் அவர்களின் நடிப்பில் மாபெரும் வெற்றி கண்ட 'காஞ்சனா' திரைப்படம் வெளியான ஏப்ரல் மாதத்தில் 14.4.2023 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் 'ருத்ரன்' திரைப்படம் வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் செய்திகள்: பெண் பத்திரிகையாளரை தகாத வார்த்தையால் திட்டிய பிரபல நடிகர் அதிரடி கைது..! திரையுலகில் பரபரப்பு..!
இறைவனின் அருளுடனும், ரசிகர்கள், மக்க,ள் ஊடகங்கள் ஆதரவுடன் 'ருத்ரன்' ஏப்ரல் மாதம் வெற்றிவாகை சூட வாழ்த்துமாறு வேண்டிக் கொள்கிறேன். இப்படிக்கு கதிரேசன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: அசைப்புல நயன்தாரா போலவே இருக்கும் வாணி போஜன்..! விதவிதமான உடையில் இளம் நெஞ்சங்களை கொள்ளையடித்த கியூட் போஸ்!