பெண் பத்திரிகையாளரை தகாத வார்த்தையால் திட்டிய பிரபல நடிகர் அதிரடி கைது..! திரையுலகில் பரபரப்பு..!
தன்னை பேட்டி கண்ட பெண் பத்திரிகையாளரை தாகத வார்த்தியால் திட்டிய மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஷியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தற்போது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஸ்ரீநாத் பாஷி ஒரு ரேடியோ ஜாக்கியாகத் தன்னுடைய வாழ்க்கையை துவங்கிவர். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக இருந்த இவர், திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் அனுபம் கெர் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கத்தில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'பிராணாயம்' திரைப்படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றிபெற்றதாலும், இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அடுத்தடுத்து, பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இதுவரை சுமார் 50 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் நடித்து முடித்துள்ள 'சட்டம்பி' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கடந்த வாரம் இந்த படத்தின் புரோமோஷன் பணிக்காக இணையதள ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு பேட்டி கொடுத்தார். இந்த பேட்டியில் போது 'சட்டம்பி' படம் குறித்த பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்ட. ஆரம்பத்தில் இருந்தே இவர் கேள்விகளை புறக்கணிக்கும் விதமாகவே நடந்து கொண்டார் என கூறப்படுகிறது. சில கேள்விகள் எழுப்பியதற்கு அவர் அமைதியாகவும் இருந்துள்ளார். இந்த பேட்டி கொடுப்பதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் வெளியேறலாமா என கேட்டதோடு, கேமராமை ஆப் செய்ய கூறியுள்ளார். ஒரு நிலையில் அவரது பேச்சுக்கு இணங்க கேமராவை குழுவினர் ஆப் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து திடீர் என ஆவேசமாகி, நேர்காணல் நடத்திய... பெண் பத்திரிகையாளரை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து, பெண் பத்திரிகையாளர் தரப்பில் இருந்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில், திங்கள் கிழக்கை நடிகர் ஸ்ரீநாத் பாஷியை மரடு போலீசார் கைது செய்தனர். பின்னர் நடிகர் காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. அதே போல் அந்த இரண்டு பெண் பத்திரிகையாளர்களும், நடிகர் கோவப்படும் படி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.