Asianet News TamilAsianet News Tamil

ஜிம்மில் எக்சசைஸ் செய்யும் நடிகர்களே உஷார்...! ஜூனியர் என்.டி.ஆருக்கு உடைந்தது கை..!

ஜிம்மில் உடல் பயிற்சி செய்யும் போது, எதிர்பாராத விதமாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு (Jr NTR) வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக மைனர் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

 

RRR movie actor jr NTR suffers injury undergoes minor srugery
Author
Chennai, First Published Nov 6, 2021, 2:19 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஜிம்மில் உடல் பயிற்சி செய்யும் போது, எதிர்பாராத விதமாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக மைனர் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். தற்போது இவர் 'பாகுபலி' திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும், தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில், ராம்சரண் உடன் இணைந்து நடித்து முடித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் 'தரக்' என்கிற படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: Samantha: விவாகரத்துக்கு பின்... கவர்ச்சி உடையில் தீபாவளி கொண்டாடிய சமந்தா! யாருடன் தெரியுமா? வைரலாகும் போட்டோ

 

RRR movie actor jr NTR suffers injury undergoes minor srugery

இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக மைனர் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை சோகம் அடையச் செய்துள்ளது. தீவிர உடற்பயிற்சியில் ஈடுபாடு கொண்ட ஜூனியர் என்டிஆர் எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கும் போது, ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக தான் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு நல்லபடியாக மைனர் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயார் ஆவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் இவர் விரைவில் குணமடைய தங்களுடைய வாழ்த்துக்களை, சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்:  Annaatthe Vs Enemy Box office collection: 'அண்ணாத்த' மற்றும் 'எனிமி' படத்தின் 2 ஆவது நாள் வசூல் நிலவரம் இதோ..!

 

RRR movie actor jr NTR suffers injury undergoes minor srugery

தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது நல்ல விஷயம் என்றாலும் , உடல் பயிற்சிகள் செய்யும் போது கண்ணும் கருத்துமாக இருப்பதும் மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு உடற்பயிற்சி உபகரணங்களையும் எப்படி உபயோகிக்க வேண்டும், என்பதை பிரபலங்கள் பலர் தெரிந்து வைத்திருந்தாலும் சில சமயங்களில் எதிர்ப்பாராத விதமாக இது போன்ற எலும்பு முறிவுகள், தசைப்பிடிப்பு போன்றவை ஏற்பட்டு அவர்களுக்கு பாதகமாக மாறி விடுகிறது. எனவே உடற்பயிற்சி செய்யும் போது அதிக கவனம் தேவை. மேலும் சமீபத்தில் உயிரிழந்த பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மாரடைப்புக்கு காரணம் கூட அதிக அளவில் உடற்பயிற்சியி செய்தது என சிலர் கருத்து தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து உடற்பயிற்சி கூட ஓரளவுதான் என்பது நன்றாகவே புரிந்திருக்கும்... எனவே உஷாராக இருங்கள்.

மேலும் செய்திகள்:  ரஜினி பட வில்லன் மகளை காதலிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்! நடிகையின் பிறந்தநாளில் வெளியான உண்மை!

 

RRR movie actor jr NTR suffers injury undergoes minor srugery

மேலும் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த  முன்னணி பிரபலங்களுக்கு அடுத்தடுத்து ஆபரேஷன் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.  கடந்த மாதம் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், சிரஞ்சீவிக்கு வலது கையில் ஏற்பட்ட நரம்பு பிரச்சனை காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு கை தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடந்த வாரம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இவர்களை தொடர்ந்து தற்போது ஜூனியர் என்டிஆருக்கும் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios