மார்ச் 25 -ம் தேதி ஆர் ஆர் ஆர் ரிலீஸ் கன்பார்ம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் செலிப்ரேஷன் அந்தம் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 

பாகுபலி வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி :

பாகுபலி என்னும் மாபெரும் படைப்பை கொடுத்தவர் ராஜமௌலி. இரண்டு பக்கங்களும் பான் வேர்ல்ட்டு மூவியாக மாறியது. காவிய கதையை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதாபாத்திரமாக வடித்து கொடுத்திருந்தார் ராஜமவுலி..இந்த வெற்றி படைப்பிற்கு பிறகு இவர் தற்போது மீண்டும் உண்மை சார்ந்த கதை நிகழ்வை கையாண்டுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரரின் கதை :

 ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. ராம ராஜு மற்றும் பீமின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றிய கதைகளைப் படித்த ராஜமௌலி. வீரர்களின் கதையில் ஈர்க்கப்பட்டு படமாக்கும் பிரமாண்ட முயற்சியை முடித்து காட்டியுள்ளார்..

முக்கிய செய்திகள்.. ராஜமவுலிக்கு என்ன ஒரு தங்கமான மனசு.... RRR ரிலீஸ் தேதி ஒருவாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டதன் நெகிழ்ச்சி பின்னணி

பிரபலங்கள் கைகோர்த்த ஆர் ஆர் ஆர் :

இந்த முயற்சியில் ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளளனர். இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 

பிரமாண்ட பொருட்செலவு : 

பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்தை பிரமாண்ட செலவில் உருவாக்கியுள்ளார்.350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படம் வரும் ஜனவரியில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

பிரபலங்கள் கலந்து கொண்ட ஆர் ஆர் ஆர் ப்ரோமோஷன் : 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கான பத்திரிக்கையாளர் ஏற்கனவே சந்திப்பு நடைபெற்றது.. சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதயநிதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் தமிழில் உரையாடியது ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. 
மேலும் செய்திகளுக்கு... RRR confirm release date : ஒருவழியாக முடிவுக்கு வந்த ராஜமௌலி..ரிலீஸ் தேதியை சூஸ் பண்ணிட்டாருப்பா..

தள்ளிப்போன படம் வெளியீடு :

ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து வெளியான ட்ரைலர் மாஸ் ஸ்டண்ட் காட்சிகளுடன் ரசிகர்களை ஈர்த்து படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற செய்தது. இதையடுத்து கடந்த ஜனவரியில் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதிகரித்த கொரோனா பரவலால் படம் தள்ளிப்போனது. பின்னர் தற்போது மார்ச் 25 -ம் தேதி ஆர் ஆர் ஆர் ரிலீஸ் கன்பார்ம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் செலிப்ரேஷன் அந்தம் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Scroll to load tweet…