- Home
- Cinema
- ராஜமவுலிக்கு என்ன ஒரு தங்கமான மனசு.... RRR ரிலீஸ் தேதி ஒருவாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டதன் நெகிழ்ச்சி பின்னணி
ராஜமவுலிக்கு என்ன ஒரு தங்கமான மனசு.... RRR ரிலீஸ் தேதி ஒருவாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டதன் நெகிழ்ச்சி பின்னணி
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த மாதம் 7-ந் தேதி ரிலீசாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

ராஜமௌலி (Rajamouli) இயக்கத்தில், ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt) உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (RRR). சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியிட உள்ளனர். கடந்த மாதம் 7-ந் தேதி ரிலீசாக இருந்த இப்படம், கடைசி நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், மீண்டும் ரிலீஸ் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த வாரம் ஆர்.ஆர்.ஆர் படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28-ந் தேதி வெளியிடப்படும் என குறிப்பிட்டிருந்தனர். ஆனால் நேற்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியில் இந்த இரண்டு தேதிகளுமே இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக மார்ச் 25-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்திருந்தனர்.
மார்ச் 18-க்கு பதில் மார்ச் 25-ந் தேதி இப்படத்தை வெளியிடுவதன் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவமும் உள்ளது. அது என்னவெனில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த தினம் வருகிற மார்ச் 17-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அவர் கடைசியாக நடித்த ஜேம்ஸ் என்கிற திரைப்படமும் வெளியாக உள்ளது. புனித் ராஜ்குமாரை கவுரவப்படுத்தும் விதமாக ஜேம்ஸ் படம் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்துக்கு கர்நாடக திரையரங்குகளில் வேறு எந்த படத்தையும் ரிலீஸ் செய்யாமல் இருக்க கர்நாடக திரையுலகமு,ம் திரையரங்க உரிமையாளர்களும் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில், ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படமும் பான் இந்தியா ரிலீஸ் என்பதால் கர்நாடகாவிலும் ஒரேசமயத்தில் ரிலீஸாக வேண்டும். அதனால் மார்ச் 18-ந் தேதி புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் படம் ரிலீஸ் ஆவதற்கு தாங்களது ஒத்துழைப்பை தரும் விதமாக, ஆர்.ஆர்.ஆர் பட ரிலீஸை ஒரு வாரம் கழித்து, அதாவது மார்ச் 25-ம் தேதிக்கு மாற்றி அறிவித்துள்ளது படக்குழு.