ஆந்திர மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சாராக உள்ள நடிகை ரோஜா, கடற்கரையில் இறங்கியபோது... தன்னுடைய கால் செருப்பை ஊழியரை பிடிக்க வைத்ததால் பலர் இவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
80-பது மற்றும் 90-களில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, சமீபகாலமாக, தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ரோஜா, தற்போது... ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா சூர்யலங்கா கடற்கரைக்கு இன்று அமைச்சர் ரோஜா சென்றிருந்தார்.
அங்கு ரோஜா கடல் நீரில் இறங்கி ஆனந்த நடை போட்டார். சிறிது நேரம் கடற்கரையை சுற்றி பார்த்த அவர்.... கடல் நீரில் இறங்கி நடைபோட்ட போது... ரோஜாவின் செருப்பை அவரது ஊழியர் கையில் வைத்திருந்தார். இது தான், சர்ச்சையாகி உள்ளது. இதுற்குறித்த சில காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியானபோது... நெட்டிசன்கள் பலர் ஒரு அமைச்சராக இருந்தாலும், ஊழியரை வைத்து செருப்பை பிடிக்க செய்வது ஏற்க முடியாத செயல் என விமர்சனம் செய்து வருகிறார்கள்.
பணம் உலகை காலி பண்ணிடும்! 'பிச்சைக்காரன் 2' படம் குறித்து சூப்பர் அப்டேட் வெளியிட்ட விஜய் ஆண்டனி!

சூர்யா லங்காவின் சுற்றுலாத் தலத்தை சுற்றி பார்த்த பின்னர், சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ரோஜா ஆய்வுக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பாபட்லா சூர்யலங்கா கடற்கரை சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது என்று அமைச்சர் ரோஜா தெரிவித்தார். சூர்யலங்கா கடற்கரையை மேலும் விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கான வேலைகள் விரைவில் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் விசாகப்பட்டினத்திற்கு அடுத்தபடியாக சூர்யலங்கா கடற்கரை மிக முக்கியமான கடற்கரை என்று கூறிய அவர், சூர்யலங்கா கரடற்கரையை பார்க்கவும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
